PulseNews
தொழில்நுட்பம்

"எம்.எல்.ஏ-க்களுக்கு கார் & மாதாந்திரப் படிகள்!": சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பல்வேறு மக்கள் நலச் திட்டங்களுடன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான (MLAs) சிறப்பு வசதிகள் குறித்த முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். மக்கள் பிரதிநிதிகள் தங்களது தொகுதிச் சார்ந்த களப்பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி துரிதமாக மேற்கொள்ள வசதியாக, அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என அவர் அறிவித்தார். வாகனம் மற்றும் மாதாந்திரப் படிகளின் விவரங்கள் அரசு வாகனம்: எளிய பின்னணியைக் கொண்ட உறுப்பினர்கள் உட்பட அனைவரும் தங்களது தொகுதிகளில் மக்கள் பணியைத் தடையின்றி மேற்கொள்ள அரசு சார்பில் வாகனங்கள் வழங்கப்படும். மாதாந்திர வாகனப் படி (ரூ.75,000): இவ்வாகனத்திற்குத் தேவையான எரிபொருள், பிரத்யேக ஓட்டுநர் (Driver) ஊதியம் மற்றும் வழக்கமான பராமரிப்புச் செலவுகளுக்காக மாதம் தோறும் ரூ. 75,000 வாகனப் படியாக அளிக்கப்படும். உதவியாளர் படி (ரூ.25,000): தொகுதி அலுவலக நிர்வாகம் மற்றும் மக்கள் மனுக்களைக் கையாளுவதற்கு உதவியாளரை நியமித்துக் கொள்ளும் பொருட்டு, மாதாந்திர உதவியாளர் படியாக ரூ. 25,000 வழங்கப்படும். கோரிக்கை நிறைவேற்றம் மற்றும் வரவேற்பு சில தினங்களுக்கு முன்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) எம்.எல்.ஏ. ஜோதிமணி, எளிய பின்புலத்தில் இருந்து வரும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையைத் திறம்பட மேற்கொள்ள அரசு சார்பில் வாகன வசதி தேவை எனக் கோரிக்கை விடுத்திருந்தார். இக் கோரிக்கையை ஏற்று நடப்புச் சட்டமன்றத் தொடரிலேயே முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் நன்றியுரை முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்புக்குச் சட்டமன்றத்தில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் வரவேற்பையும் நன்றியையும் தெரிவித்தனர்: விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி: தங்களது கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறைவேற்றித் தந்த முதலமைச்சருக்கும் பேரவைத் தலைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். அமைச்சர்கள் ராஜ்மோகன் & ஷாஜகான்: இத் திட்டத்தின் மூலம் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் எனப் பலருக்கும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனக் கூறி பாராட்டு தெரிவித்தனர். எம்.எல்.ஏ காமராஜ்: "முதலமைச்சர் வழங்கும் காரில் தொகுதிக்குச் செல்வதே தனி கெத்து" எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார.

Seithipunal13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
"எம்.எல்.ஏ-க்களுக்கு கார் & மாதாந்திரப் படிகள்!": சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுடன், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான புதிய வசதிகள் குறித்தும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதி சார்ந்த பணிகளை எவ்விதத் தொய்வும் இன்றி மேற்கொள்வதை உறுதிசெய்யும் வகையில், அனைத்து உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மாதாந்திரப் படிகள் மற்றும் வாகனங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களையும் முதலமைச்சர் இந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். களப்பணியைத் துரிதப்படுத்தும் நோக்கில் இந்த சிறப்பு வசதிகள் குறித்த முக்கிய முடிவுகளை அவர் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology