PulseNews
தொழில்நுட்பம்

எம்.எல்.ஏ.க்களின் பயணத்துக்கு புதிய கார்... தலைமைச் செயலகத்தில் சோதனை ஓட்டம்...!

தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிப் பணிகளை எளிதாக்கும் வகையில் அரசு சார்பில் வாகனம் மற்றும் உதவியாளர் வசதி வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இதற்காக சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, உரிய அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவதற்கான வாகனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் வேகமெடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மஹிந்திரா நிறுவனத்தைச் சேர்ந்த 6 வகையான வாகனங்கள் சென்னை தலைமைச் செயலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ, எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஸ்கார்பியோ-என், ஸ்கார்பியோ கிளாசிக், பொலிரோ மற்றும் பொலிரோ நியோ ஆகிய 6 வகை வாகனங்கள் தலைமைச் செயலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த வாகனங்களின் பயண வசதி, பாதுகாப்பு அம்சங்கள், பராமரிப்பு செலவு, எரிபொருள் சிக்கனம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. வாகனங்களின் செயல்பாடு மற்றும் பயணத்துக்கு ஏற்ற தன்மை குறித்து நேரடியாக அறிந்துகொள்ள சோதனை ஓட்டமும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொகுதிகளுக்கு அடிக்கடி சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால், நீண்ட தூரப் பயணத்துக்கு ஏற்ற வாகனம் எது என்பதும் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இந்த 6 வகை வாகனங்களில் எது சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு மிகவும் பொருத்தமானது என்பது பாதுகாப்பு, பயண வசதி, பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இறுதியாக முடிவு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனப் பராமரிப்பு மற்றும் ஓட்டுநர் செலவுகளுக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், அலுவலக உதவியாளருக்காக ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்களுக்கான அரசு வாகனத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியான மறுநாளே தலைமைச் செயலகத்தில் பல்வேறு வாகனங்கள் ஆய்வுக்கு வந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Seithipunal15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
எம்.எல்.ஏ.க்களின் பயணத்துக்கு புதிய கார்... தலைமைச் செயலகத்தில் சோதனை ஓட்டம்...!
PulseNews சுருக்கம்

சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, அவர்களுக்கு வாகன வசதி மற்றும் உதவியாளர் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தத் தேவையான சட்டத்திருத்தங்கள் மற்றும் அரசாணைகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்குவதற்காக வாகனங்களைத் தேர்வு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதன் ஒரு பகுதியாக, சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் மஹிந்திரா நிறுவனத்தின் 6 வகையான வாகனங்கள் சோதனை ஓட்டத்திற்கு உட்படுத்தப்பட்டன.

மூலம்: SeithipunalSeithipunal-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology