TATA Cars Price Hike: இன்ஜின் டூ EV SUV - மொத்த கார் மாடல்களுக்கும் விலையை ஏற்றியா டாடா - எவ்வளவு தெரியுமா?

TATA Cars Price Hike: டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் எந்தெந்த கார் மாடல்களுக்கு எவ்வளவு விலை உயர்த்தியுள்ளது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

கார் விலையை உயர்த்திய டாடா:

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகன பிரிவில் உள்ள அனைத்து மாடல்கள் மீதும், மீண்டும் விலை உயர்வை அறிவித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த நடவடிக்கையின்படி, உள்ளூர் ப்ராண்டின் கார்கள் மற்றும் எஸ்யுவிக்களின் விலை 25 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விலையானது இன்ஜின் மற்றும் மின்சார எடிஷன் என இரண்டு வகையான கார்களுக்கும் பொருந்தும். மாடல் மற்றும் வேரியண்ட்கள் அடிப்படையில் ஒவ்வொரு வாகனத்திற்குமான விலை உயர்வு வேறுபடும். அதன்படி, 25 ஆயிரம் ரூபாய் விலை உயர்வு என்பது அதிகபட்ச திருத்தமாகும். ஆனால், இதுவே டாடா போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தாது. புதிய அறிவிப்பு அமலுக்கு வருவதற்குள், ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கான விலை உயர்வு தொடர்பான விரிவான அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்வுக்கான காரணம் என்ன?

டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதிகரிக்கும் உற்பத்திக்கான உள்ளீட்டு செலவு மற்றும் தொடர்ச்சியான பணவீக்க அழுத்தங்கள் காரணமாக இந்த விலை உயர்வு முடிவை எடுத்துள்ளோம். செலவின சுமையின் பெரும்பகுதியை நிறுவனமே எடுத்துக்கொண்டாலும், கனிசமான கூடுதல் செலவு மட்டும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது” என விளக்கமளித்துள்ளது. டாடா போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒட்டுமொத்த வாகனங்களுக்குமே இந்த திருத்த விலை பட்டியல் பொருந்தும். இதில் டியாகோ, டைகோர், பஞ்ச், ஆல்ட்ரோஸ், நெக்சான், கர்வ், ஹாரியர் மற்றும் சஃபாரி ஆகியவை அடங்கும். மாடல் மற்றும் வேரியண்ட்கள் அடிப்படையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் விலை உயர்வு மேற்கொள்ளப்படும்.

மூன்று மாதங்களில் 2வது விலை உயர்வு

கடந்த ஜூலை மாதம் தான் தனது இன்ஜின் மற்றும் மின்சார கார்கள் என அனைத்திற்குமே 1.5 சதவிகித விலை உயர்வை டாடா நிறுவனம் அறிவித்தது. தொடர்ந்து மூன்று மாதங்கள் இடைவெளியிலேயே இரண்டாவது முறையாக டாடா மோட்டார்ஸ் விலை உயர்வை அறிவித்துள்ளது. வழக்கமாக சதவிகிதத்தில் விலை உயர்வை அறிவிக்கும் டாடா இந்த முறை துல்லியமாக 25 ஆயிரம் ரூபாய் என அறிவித்துள்ளது. விழாக்காலம் நெருங்கி வரும் நிலையில் டாடா மோட்டார்ஸ் மட்டுமின்றி, தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள அனைத்து கார் மாடல்கள் மீது செப்டம்பர் 1ம் தேதி முதல் 1 சதவிகிதம் விலையை உயர்த்துவதாக ஹுண்டாய் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான மாருதி சுசூகி கார்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: Royal Enfield: பெஸ்ட் பைக்கை பீஸ்ட் ஆக்கும் ராயன் என்ஃபீல்ட் - ஹிமாலயன் 750, 5 அம்சங்கள் - லாஞ்ச், விலை விவரங்கள்

விழாக்கால ஆஃபர் போச்சா..!

செப்டம்பர் மாதம் இந்தியாவின் வாகனத் தொழில்துறைக்கு ஒரு முக்கியமான காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிப்பதால், இந்த அறிவிப்பு வெளியாகும் நேரம் குறிப்பிடத்தக்கது. காரணம், பண்டிகை மாதங்களில் உற்பத்தியாளர்கள் பொதுவாக அதிக தேவையை எதிர்கொள்வார்கள். டாடா வாகனத்தை வாங்கத் திட்டமிடும் வாடிக்கையாளர்கள், திருத்தம் அமலுக்கு வருவதற்கு முன்பு தற்போதைய விலையில் தங்கள் வாங்குதலை முடித்தால், வரவிருக்கும் விலை உயர்வைத் தவிர்க்க வாய்ப்புள்ளது.

திருத்தப்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலைகள் இறுதி ஆன்-ரோடு விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். செப்டம்பர் 1 முதல் புதிய விலைகள் அமலுக்கு வருவதால், ஒவ்வொரு மாடல் மற்றும் வேரியண்டிற்கும் பொருந்தக்கூடிய சரியான விலை உயர்வை அறிந்துகொள்ள, வாங்குபவர்கள் டாடா மோட்டார்ஸின் புதுப்பிக்கப்பட்ட விலைப் பட்டியலை எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பயணிகள் வாகனப் பிரிவில் உள்ள அனைத்து கார் மற்றும் எஸ்யுவி (SUV) மாடல்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த மாற்றத்தின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட கார் மற்றும் எஸ்யுவி மாடல்களின் விலை அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. டாட்டா நிறுவனத்தின் அனைத்து கார் மாடல்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.