Cheapest E-SUV: குட்டி பசங்க வரோம், வழி விடுங்க..! 3 ப்ராண்ட்களின் மலிவு விலை மின்சார SUV-க்கள் - ரேஞ்ச்,அம்சங்கள்

Cheapest E-SUV: இந்தியாவில் அடுத்தடுத்து அறிமுகமாக உள்ள மூன்று மலிவு விலை மின்சார எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

3 புதிய மின்சார எஸ்யுவிக்கள்:

தனது ஆரம்ப நாட்களில் இருந்து தற்போதைய இந்திய மின்சார வாகனங்கள் சந்தையானது மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதேநேரம், இந்த பிரிவில் உள்ள பெரும்பாலான கார் மாடல்கள் இன்ஜின் எடிஷனை காட்டிலும் விலை உயர்ந்தவையாக உள்ளன. அதேநேரம் சந்தையில் தேவை அதிகரிப்பு, உள்ளூரிலேயே உற்பத்தி அதிகரிப்பு, மேம்படுத்தப்பட்ட பேட்டரி தொழில்நுட்பம், மேம்பட்ட சிக்கன நடவடிக்கைகள் ஆகியவை மின்சார கார்களின் விலையை படிப்படியாகக் குறைத்து வருகின்றன. பேட்டரியை வாடகைக்கு பயன்படுத்தும் உரிமை திட்டங்களின் அறிமுகம், மின்சார வாகனங்களை சொந்தமாக்குவதற்கான முதற்கட்ட நிதிசுமையை கடுமையாக குறைக்கிறது.

இந்தப் பிரிவில் போட்டி தீவிரமடைந்து வருவதால், மாருதி சுசூகி, ஹுண்டாய் மற்றும் கியா போன்ற உற்பத்தியாளர்களிடமிருந்து பல மலிவு விலை மாடல்கள் மின்சார எஸ்யுவிக்களாக அறிமுகப்படுத்தப்பட உள்ளன. அந்த வகையில் மாருதி, ஹுண்டாய் மற்றும் கியா சார்பில் மிகவும் மலிவு விலையில் அறிமுகமாக உள்ள மின்சார வாகனங்கள் குறித்து இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து வரும் 3 குட்டி மின்சார எஸ்யுவிக்கள்:

1. மாருதியின் மின்சார எஸ்யுவி

மாருதி சுசூகி ஒரு மின்சார ஹேட்ச்பேக் காரை உருவாக்கி வருகிறது. இது 2026-27 நிதியாண்டில் உலகளவில் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷன் இ-ஸ்கையின் சமீபத்திய சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், இந்தியாவிற்கு வரவிருக்கும் மாருதியின் இந்த சிறிய மின்சார வாகனம் (EV) குறித்த ஒரு தெளிவான பார்வையை அளிக்கின்றன. உற்பத்திக்குத் தயாரான விஷன் இ-ஸ்கையின் எடிஷன், மாருதி சுசூகியின் புதிய K-EV ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு சுமார் 3.39 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கக் கூடும். இது 29kWh பேட்டரியை பெறும் என்றும், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 270 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

2. ஹுண்டாய் காம்பாக்ட் EV

ஹுண்டாய் மோட்டார் இந்தியா, மார்ச் 2027-க்குள் ஒரு காம்பாக்ட் மின்சார எஸ்யுவி-யை அறிமுகப்படுத்தும் திட்டத்தை உறுதி செய்துள்ளது. அது உலகளாவிய ஹுண்டாய் இன்ஸ்டர் EV-யை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் 42kWh மற்றும் 49kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படலாம். பெரிய பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 350 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவனத்தை ஈர்க்கும் வகையில் ப்ரீமியம் மாடலாக ஓவர் தி ஏர் அப்டேட்கள், டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், இன்-கார் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம், பல ஏர்பேக்குகள் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டிருக்கக் கூடுமாம். உள்ளூர் சந்தையில் இதன் விலை 9 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படலாம்.

3. கியா காம்பாக்ட் EV

கியா நிறுவனம் இந்திய சந்தைக்காக மூன்று ஹைப்ரிட் மற்றும் ஒரு காம்பாக்ட் EV உட்பட நான்கு புதிய மின்மயமாக்கப்பட்ட மாடல்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாக அறிவித்துள்ளது . வரவிருக்கும் கியா எலெக்ட்ரிக் SUV உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் மற்றும் சுமார் 4.2 மீட்டர் நீளம் கொண்டிருக்கும். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படியுங்கள்: Upcoming 7 Seater: ரூ.13 லட்சம் பட்ஜெட்டில் ஆல் நியூ ஃபாரின் 7 சீட்டர் - கொரியன் செட்டிற்கு மரன அடி? புதிய காரின் டிடெய்ல்ஸ்

சிறிய மின்சார கார்கள் பிரிவில் எம்ஜி கோமெட், டாடா பஞ்ச் போன்ற மாடல்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அவற்றிற்கு போட்டியாக மாருதி, ஹுண்டாய் மற்றும் கியாவின் புதிய மாடல்கள் உள்ளூர் சந்தையில் நிலைநிறுத்தப்பட உள்ளன.

இந்திய மின்சார வாகன சந்தை தற்போது பெரும் வளர்ச்சியை அடைந்து வரும் நிலையில், விலை குறைவான மூன்று புதிய மின்சார எஸ்யுவி (E-SUV) ரக கார்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன. தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான மின்சார கார்கள், பெட்ரோல் அல்லது டீசல் மாடல்களை விட அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சூழலை மாற்றும் வகையில், இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் மலிவு விலை மின்சார எஸ்யுவிக்கள் சந்தைக்கு வரவுள்ளன. இந்த புதிய வரவுகள் குறித்த விவரங்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் விரைவில் வெளியாக உள்ளதால், மின்சார வாகன ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.