டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இரு சக்கர வாகன நிறுவனம் ஹீரோ. இவர்களின் Splendor Plus பைக்கின் புகழ் இரு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் அறிந்ததே. மைலேஜ், வசதிகள் என பலவற்றிலும் மிகுந்த பலமாக இந்த Splendor Plus பைக் உள்ளது.

Hero Splendor Plus Flex Fuel:

இந்த பைக்கின் புதிய அப்டேட் வெர்சனாக அறிமுகப்படுத்தப்பட்டது Hero Splendor Plus Flex Fuel. இந்த பைக்கின் விலை, தரம், சிறப்புகள் பற்றி கீழே விரிவாக காணலாம்.

இந்த பைக்கில் ஒரே ஒரு வேரியண்ட் மட்டுமே உள்ளது. இதன் விலை ரூபாய் 94 ஆயிரத்து 361 ஆகும். இதில் 97.2 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 4 கியர்கள் உள்ளது. இந்த பைக் 63 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் எடை 113 கிலோ ஆகும்.

617 கிலோமீட்டர் மைலேஜ்:

இதில் 9.8 லிட்டர் வரை பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. இதன் இருக்கை உயரம் 785 மி.மீட்டர் ஆகும். இந்த Hero Splendor Plus Flex Fuel பைக் கருப்பு நிறத்தில் உள்ளது. இதில் பெட்ரோல் டேங்கரில் மட்டும் நீலம், வெள்ளை, வெளிர்பச்சை நிறம் உள்ளது. 8.44 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 8.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. அதிகபட்சமாக 87 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம்.

ஒரு முறை பெட்ரோல் டேங்கரை நிரப்பினால் 617.4 கிலோமீட்டர் வரை செல்லலாம். 1 சிலிண்டர், ஏர் கூல்ட் மற்றும் 2 வால்வுகள் எஞ்ஜின் டைப் ஆகும். பிஎஸ்6 பாஸ் 2 பி எமிஷன் ஸ்டாண்டர்ட் ஆகும். ஐபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்கம் ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.

சிறப்புகள்:

முன்பக்கம் 18 இன்ச் சக்கரமும், பின்பக்கம் 18 இன்ச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. டெலிஸ்கோபிக் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்ஸ் முன்பக்க சஸ்பென்சனும், பின்பக்கம் 5 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர்சும் பொருத்தப்பட்டுள்ளது.

கிரவுண்ட் கிளியரன்ஸ் 165 மி.மீட்டர் ஆகும். 1 லிட்டர் ரிசர்வ் டேங்க் வசதி உள்ளது. 70 ஆயிரம் கிலோமீட்டர் அல்லது 5 வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வசதி உள்ளது. அனலோக் வசதி உள்ளது. டிஜிட்டல் ப்யூல் கேஜ் வசதி உள்ளது. 1 ட்ரிப்மீட்டர் வசதி உள்ளது. லோ ப்யூல் இண்டிகேட்டர் வசதி உள்ளது.

வசதிகள்:

டேகோமீட்டர், ஸ்டாண்ட் அலார்ம், கியர் இண்டிகேட்டர், கியர் ஷிப்ட் லைட், லோ ஆயில் இண்டிகேட்டர், ஹை பீம் இண்டிகேட்டர் வசதிகள் கிடையாது. கால்/ எஸ்எம்எஸ் அலர்ட் வசதிகளும் கிடையாது. யுஎஸ்பி சார்ஜிங் வசதி முன்பக்கம் உள்ளது. சைட் ஸ்டாண்ட் எஞ்ஜின்/மோட்டார் கட் ஆஃப் வசதி உள்ளது.

கிக்/ செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. சைலன்ஸ் கவர் வசதி உள்ளது. கில் சுவிட்ச் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி உள்ளது. ஹாலோஜன் முகப்பு விளக்குகள் வசதி உள்ளது. பகலிலும் எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரேக்/ டெயில் விளக்குகள் ஹாலோஜன் விளக்குகள் ஆகும்.

சிறந்த மைலேஜ், ஓட்டுவதற்கும் எளிதான, எடை குறைவான இந்த Hero Splendor Plus Flex Fuel பைக் வாடிக்கையாளர்கள் பலரையும் கவர்ந்துள்ளது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ, தனது புகழ்பெற்ற ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் புதிய அப்டேட்டாக 'ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பிளக்ஸ் ஃபியூயல்' மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மைலேஜ் மற்றும் பல்வேறு வசதிகளுக்காக அறியப்படும் இந்த பைக்கின் புதிய பதிப்பு குறித்து தற்போது பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த புதிய பிளக்ஸ் ஃபியூயல் மாடல் ஒரே ஒரு வேரியண்டில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கின் விலை, தரம் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.