PulseNews
தொழில்நுட்பம்

ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?

இந்தியாவில் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக, மின்சார வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிக மைலேஜ் தரும் இ ஸ்கூட்டர்களுக்கு என்று இந்தியாவில் தனி வரவேற்பு இருந்து வருகிறது.

அந்த வரிசையில் ஒரே சார்ஜில் 300 கிலோமீட்டருக்கு மேல் மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.

3.OLA S1 Pro:

இந்தியாவில் இ ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் நிறுவனம் ஓலா. ஓலா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான OLA S1 Pro இ ஸ்கூட்டர் அதிக மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டர்களில் முக்கியமானதாக உள்ளது. இதில் மொத்தம் 5 வேரியண்ட் உள்ளது. இதன் டாப் வேரியண்டில் 5.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட OLA S1 Pro இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். அதிகபட்சமாக மணிக்கு 141 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 118 கிலோ எடை கொண்டது. இதன் வசீகரமான தோற்றமும், எடையும் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரும் ஓட்டும் வகையில் உள்ளது.

2. OLA S1 X Plus:

ஓலா நிறுவனத்தின் மற்றொரு முக்கியமான படைப்பு இந்த OLA S1 X Plus இ ஸ்கூட்டர். இந்த இ ஸ்கூட்டரில் 5.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 320 கிலோமீட்டர் வரை செல்லலாம். அதிகபட்சமாக 125 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 105 கிலோ எடை கொண்டது. ஒரு முறை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரம் ஆகிறது. சிபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம் உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் ட்ரம் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது. 3 வருடம் அல்லது 50 ஆயிரம் கிலோமீட்டர் பேட்டரி வாரண்டி அளிக்கப்படுகிறது.

1. Simple Energy Ultra:

இந்தியாவிலே அதிக மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டராக திகழ்வது இந்த Simple Energy Ultra இ ஸ்கூட்டர். இதில் 6.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. அதிகபட்சமாக 115 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் அவெய்லபிளிட்டி வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. 139 கிலோ எடை ஆகும். இதன் விலை ரூபாய் 2 லட்சத்து 51 ஆயிரத்து 742 ஆகும். இந்தியாவில் வேறு எந்த இ ஸ்கூட்டரும் 400 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கும் இ ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தவில்லை.

இந்த 3 இ ஸ்கூட்டர்களும் இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது.

Abp News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
PulseNews சுருக்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிக மைலேஜ் தரும் ஸ்கூட்டர்களுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ஒரே சார்ஜில் 300 கிலோமீட்டருக்கு மேல் பயணிக்கக்கூடிய திறன் கொண்ட மின்சார இருசக்கர வாகனங்கள் குறித்த ஆர்வம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் முன்னணியில் உள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ்1 புரோ உள்ளிட்ட குறிப்பிட்ட மின்சார ஸ்கூட்டர்கள், நீண்ட தூரம் பயணிக்கும் வசதியை வழங்கி சந்தையில் தனித்துவம் பெற்று விளங்குகின்றன. இத்தகைய அதிக மைலேஜ் திறன் கொண்ட முக்கிய மின்சார ஸ்கூட்டர்கள் எவை என்பது குறித்த கூடுதல் விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology