PulseNews
தொழில்நுட்பம்

பட்ஜெட் விலையில் எஸ்யூவி.. அறிமுகமாகியது Skoda Kylaq Sportline கார் - இவ்ளோ வசதிகளா?

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் ஸ்கோடா கார். ஸ்கோடா நிறுவனத்தின் கார்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Skoda Kylaq Sportline அறிமுகம்:

ஸ்கோடா நிறுவனத்தின் மிகவும் பிரபலமான காராக இருப்பது Skoda Kylaq. இந்த காரின் அப்டேட் வெர்சனாக இந்தியாவில் அறிமுகமாகி இருப்பது Skoda Kylaq Sportline ஆகும். இந்த காரில் 2 வேரியண்ட் அறிமுகமாகி உள்ளது.

1. Kylaq Sportline - 1.0 TSI MT - ரூபாய் 11.32 லட்சம்

2. Kylaq Sportline - 1.0 TSI AT - ரூபாய் 12.32 லட்சம்

சிறப்புகள்:

இந்த எஸ்யூவி கார் பலரது மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றுள்ளது. 17 இன்ச் கருப்பு அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. டூயல் டோன் ஃப்ளோட்டிங் ரூஃப் உள்ளது. இந்த காருக்கு எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் 25.6 செ.மீட்டர் தொடுதிரை இன்ஃபோடெய்ன்மென்ட் திரை உள்ளது. 20.32 செ.மீட்டர் விர்ச்சுவல் காக்பிட் இதில் உள்ளது.

இந்த காரின் ஆட்டோமெட்டிக் வேரியண்ட் ரூபாய் 12.32 லட்சம் ஆகும். இந்த காரின் மேனுவல் வேரியண்ட் ரூபாய் 11.32 லட்சம் ஆகும். இந்த காரில் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 கியர்கள் உள்ளது.

வசதிகள்:

இந்த கார் என்சிஏபி ரேட்டிங்கில் 5 ஸ்டார் பாதுகாப்பு குறியீட்டைப் பெற்றுள்ளது. ஆறு ஏர்பேக்குகள் வசதி உள்ளது. நான்கு வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் கேபின் வசதி வாடிக்கையாளர்களை மிகவும் கவரும் வகையில் உள்ளது.

இந்த காரின் வெளிப்புறத் தோற்றம் மிகவும் வசீகரமாக உள்ளது. கம்பீரமாகவும், வசீகரமாகவும் இருக்கும் இதன் தோற்றம் வாடிக்கையாளர்களை சுண்டி இழுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எல்இடி பனி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளது. இதில் சிங்கிள் பேன் சன்ரூஃப் மேற்கூரை உள்ளது. வயர்லஸ் போன் சார்ஜர் வசதி உள்ளது. 6 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம் வசதி உள்ளது. அலுமினியம் பெடல்ஸ் வசதி உள்ளது.

மைலேஜ்:

இந்த காரின் மேனுவல் வேரியண்ட் 19.68 கிலோமீட்டர் மைலேஜும், ஆட்டோமெட்டிக் வேரியண்ட் 19.05 கிலோமீட்டர் மைலேஜும் அளிக்கிறது. ஸ்கோடா நிறுவனத்தின் கார்கள் எப்போதும் இந்திய சந்தையில் தனித்துவமாக உள்ளது. பட்ஜெட் விலையில் அறிமுகமாகியுள்ள இந்த Skoda Kylaq Sportline கார் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஸ்கோடாவின் மதிப்பை பன்மடங்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பட்ஜெட் விலையில் எஸ்யூவி.. அறிமுகமாகியது Skoda Kylaq Sportline கார் - இவ்ளோ வசதிகளா?
PulseNews சுருக்கம்

இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஸ்கோடா நிறுவனம், தனது பிரபலமான ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq) காரின் புதிய அப்டேட் பதிப்பான 'கைலாக் ஸ்போர்ட்லைன்' (Kylaq Sportline) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கார் இரண்டு வகைகளில் சந்தைக்கு வந்துள்ளது.

இதன் 1.0 TSI மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) வேரியண்ட் 11.32 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், இதன் 1.0 TSI ஆட்டோமேட்டிக் (AT) வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology