கொலம்பியா முதல் மெக்சிகோ வரை... 2026-ல் பதிவான 10 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்; பூமிக்கு ஆபத்தா?
2026-ம் ஆண்டில் வெனிசுலா, மெக்சிகோ மற்றும் கொலம்பியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் 7 மற்றும் அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான 10 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இதனால் பூமியின் நில அதிர்வுகள் வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து வருகிறதா அல்லது 2026-ம் ஆண்டு 'உலக அழிவின்' தொடக்கமா என்ற கேள்வியும் அச்சமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இத்தகைய கூற்றுகளுக்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். சமீபத்தில் ஆக.10-ம் தேதி மேற்கு கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டில் பதிவான பெரிய நிலநடுக்கங்களின் வரிசையில் இதுவும் இணைந்துள்ளது. 2026-ல் பதிவான 10 முக்கிய நிலநடுக்கங்கள்: தேதி இடம் / நாடு ரிக்டர் அளவு 22 பிப்.2026 கோட்டா பெலுட், மலேசியா 7.1 24 மார்ச் 2026 தொங்கா 7.5 30 மார்ச் 2026 வனுவாட்டு 7.3 1 ஏப்ரல் 2026 இந்தோனேசியா 7.4 20 ஏப்ரல் 2026 ஜப்பான் 7.4 24 ஜூன் 2026 வெனிசுலா 7.2 24 ஜூன் 2026 வெனிசுலா 7.5 17 ஜூலை 2026 மெக்சிகோ 7.3 7 ஆகஸ்ட் 2026 வெனிசுலா 7.5 10 ஆகஸ்ட் 2026 கொலம்பியா 7.4 அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) நீண்டகாலப் பதிவுகளின்படி, பூமி ஒரு சராசரி ஆண்டில் 7 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் சுமார் 16 பெரிய நிலநடுக்கங்களைச் சந்திக்கிறது. இதில் 7 முதல் 7.9 ரிக்டர் அளவிலான 15 நிலநடுக்கங்களும், 8 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவில் ஒரு நிலநடுக்கமும் அடங்கும். எனவே, 2026-ல் 10 நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பது பரபரப்பாகத் தோன்றினாலும், பூமியின் நில அதிர்வுச் செயல்பாடுகள் திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன என்பதற்கு இது ஆதாரமாகாது. பூமியின் மேலோடு 'டெக்டோனிக் தகடுகள்' (Tectonic Plates) எனப்படும் பிரம்மாண்டமான தட்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகடுகள் ஆண்டுக்குச் சில சென்டிமீட்டர் என்ற அளவில் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று மோதும் போதோ, விலகும் போதோ அல்லது உரசும் போதோ பாறைகளின் விளிம்புகளில் அழுத்தம் சேகரமாகிறது. அந்த ஆற்றல் திடீரென வெளியேறும்போது நிலநடுக்கமாக உருவெடுக்கிறது. நிச்சயமாக இல்லை. 2026-ம் ஆண்டு பூமியின் முடிவு என்பதற்கு எந்த அறிவியல் சான்றும் இல்லை. இந்த 10 சக்திவாய்ந்த நிலநடுக்கங்களும் பூமி புவியியல் ரீதியாகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோள் என்பதை நினைவூட்டுகின்றன. எனவே, பூமி அழியப் போகிறதா என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, நிலநடுக்க அபாயப் பகுதிகளில் வாழும் மக்கள் அடுத்த கட்ட நிலநடுக்கங்களை எதிர்கொள்ளப் போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை வசதிகளுடன் தயார் நிலையில் இருக்கிறார்களா என்பதே தற்போதைய முதன்மையான தேவையாகும்.

2026-ம் ஆண்டில் வெனிசுலா, மெக்சிகோ மற்றும் கொலம்பியா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் ரிக்டர் அளவில் 7-க்கும் அதிகமான தீவிரத்துடன் 10 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஆகஸ்ட் 10 அன்று மேற்கு கொலம்பியாவில் நிலநடுக்கம் பதிவானது.
இத்தகைய தொடர் நிலநடுக்கங்களால் பூமியில் அதிர்வுகள் அதிகரித்து வருகிறதா அல்லது இது உலகின் அழிவிற்கான அறிகுறியா என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இருப்பினும், இத்தகைய கருத்துக்களுக்கு எந்தவொரு அறிவியல் ஆதாரமும் இல்லை என ஆய்வாளர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.