காஞ்சிபுரம் மக்களுக்கு மெகா நியூஸ்! இனி Traffic தொல்லையே இருக்காது... அந்த 3 இடங்களில் அதிரடி மாற்றம

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் வழியாக செங்கல்பட்டு வரை மின்சார ரயில் வழித்தடம் இயங்கி வருகிறது. தக்கோலம், திருமால்பூர், காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கிழக்கு, நத்தப்பேட்டை, வாலாஜாபாத், பழையசீவரம், பாலூர், வில்லியம்பாக்கம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் உள்ள கரியன்கேட், காஞ்சிபுரம் - வையாவுர் சாலையில் உள்ள காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையம், முத்தியால்பேட்டை - ராஜகுளம் புறவழிச்சாலையில் உள்ள நத்தப்பேட்டை ஆகிய மூன்று ரயில் கடவுப்பாதைகளைக் கடப்பதற்கு வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

கோரிக்கையும் மக்கள் எதிர்ப்பார்ப்பும்

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரயில்கள் கடந்து செல்லும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடுத்த ரயில் வருவதற்குள் கடவுப்பாதையைக் கடக்க முற்படும் வாகனங்களைக் கட்டுப்படுத்த ரயில்வே ஊழியர்களும் கடும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சில நேரங்களில் கேட் மூட முடியாமல் ரயில் சிக்னலுக்குக் காத்திருக்கும் நிலையும் உருவாகிறது. இதனால் அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

மக்கள் பிரதிநிதிகள் மனு

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, காஞ்சிபுரம் திமுக எம்பி செல்வம் மற்றும் தற்போதைய காஞ்சிபுரம் எம்எல்ஏவும் அமைச்சருமான ரஞ்சித் குமார் ஆகியோர் ரயில்வே நிர்வாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் அளித்தனர். இந்த மனுவைப் பரிசீலித்த சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம், இத்திட்டம் குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு கடந்த மாதம் பரிந்துரை செய்தது.

கூட்டு கள ஆய்வு

ரயில்வே நிர்வாகம் அனுப்பிய பரிந்துரை கடிதத்தின் அடிப்படையில், வரும் 27-ம் தேதி மாநில நெடுஞ்சாலைத் துறை பொறியியல் வல்லுநர்கள் மற்றும் ரயில்வே நிர்வாகப் பொறியாளர்கள் இணைந்து நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்யவுள்ளனர். ஆய்வுக்குப் பிறகு திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டதும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாகத் தொடங்கும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரயில்வே துறை விளக்கம்

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் ஏற்கனவே மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு துறை அதிகாரிகளும் ஆய்வு செய்த பின், அப்பகுதியில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டு, பாலத்தின் வடிவமைப்பு முடிவு செய்யப்படும். அதன் பின்னரே இறுதி ஒப்புதல் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று இடங்களில் மேம்பாலம் அமைவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், இனி தடையின்றி செல்ல வழி பிறக்கும் என வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அரக்கோணத்திலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் மின்சார ரயில் வழித்தடத்தில் தக்கோலம், காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட நிலையங்கள் வழியாக தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் அமைந்துள்ள கரியன்கேட் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் மூலம் காஞ்சிபுரத்தைச் சுற்றியுள்ள குறிப்பிட்ட மூன்று இடங்களில் போக்குவரத்து சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் போக்குவரத்துத் தொல்லை நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.