PulseNews
தொழில்நுட்பம்

Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்

Cheap Automatic Cars: இந்திய சந்தையில் 25 கி.மீ., மைலேஜ், 6 ஏர்பேக்குகள் மற்றும் ப்ரீமியம் அம்சங்களை கொண்டு, மலிவு விலை ஆட்டோமேடிக் கார்கள் குறித்து இங்கே அறியலாம்.

மலிவு விலை ஆட்டோமேடிக் கார்கள்:

சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில், எளிதாக கையாளவ்தற்கு ஏதுவாக ஆட்டோமேடிக் கார்களை பொதுமக்கள் பரிசீலிக்கின்றனர். ஓட்டுவதற்கு ஏதுவாக இருந்தாலும் இந்த கார் விலை மற்றும் கணிசமான மைலேஜ் ஆகியவை பயனர்களின் கவலையாக உள்ளது. இந்நிலையில் உள்ளூர் சந்தையில் 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ், 6 ஏர் பேக்குகள் மற்றும் ப்ரீமியம் அம்சங்களை கொண்டு, மலிவு விலையில் உள்ளூரில் கிடைக்கும் சில ஆட்டோமேடிக் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

டயங்கரமான ஆட்டோமேடிக் கார்கள்:

1. ஹோண்டா அமேஸ்

இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பிரபலமான காம்பேக்ட் செடானாக ஹோண்டாவின் அமேஸ் திகழ்கிறது. இதன் ஸ்மூத்தான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ், வசதியான பயண அனுபவம் மற்றும் ப்ரீமியம் உணர்ச்சி ஆகியவை வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகிறது. V பெட்ரோல் ஆட்டோமேடிக் வேரியண்டின் விலை சுமார் ரூ.9.81 லட்சமாக (எக்ஸ் - ஷோரூம்) உள்ளது. இதனால் குறைந்த பட்ஜெட்டில் வசதியான, அம்சங்கள் நிறைந்த செடானைத் தேடும் குடும்ப பயன்பாட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமையும்.

இந்தக் காரில் உள்ள மேம்பட்ட CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பேடில் ஷிஃப்டர்கள் ஓட்டும் அனுபவத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஹோண்டா சென்சிங் ADAS தொழில்நுட்பம் ஆகியவை இதன் முக்கிய வசதிகளாகும். இதன் நேர்த்தியான 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மென்மையாகவும் அமைதியாகவும் உள்ளது. அதே சமயம் CVT கியர்பாக்ஸ் ஒரு லிட்டருக்கு சுமார் 19.46 கி.மீ. என்ற ஈர்க்கக்கூடிய மைலேஜை வழங்குவதாகக் கூறப்படுகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங் & குழந்தைகளுக்கான பிரிவில் 4 ஸ்டார் ரேட்டிங் பெற்று கவனத்தை ஈர்க்கிறது.

2. ஸ்கோடா கைலாக்

ஸ்கோடாவின் சப்-காம்பாக்ட் எஸ்யுவி ஆன கைலாக் அதன் உறுதியான கட்டமைப்புத் தரம் மற்றும் ஜெர்மானிய பொறியியல் டச் மூலம் இந்தியச் சந்தையில் ஒரு வலுவான முத்திரையைப் பதித்துள்ளது. இதன் க்ளாசிக் ப்ளஸ் ஆட்டோமேடிக் வேரியன்ட் சுமார் ரூ.9.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. ப்ரீமியம் ஆட்டோமேட்டிக் எஸ்யுவியை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான தேர்வாக இது அமைகிறது. பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட ஓட்டுநர் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் கைலாக், குடும்பங்கள் மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்களுக்கான நல்ல தேர்வாக உள்ளது.

ஸ்கோடா கைலாக், சக்திவாய்ந்த 1.0-லிட்டர் TSI டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சிறப்பான செயல்திறனையும், ஈர்க்கக்கூடிய ஓட்டுநர் அனுபவத்தையும் வழங்குகிறது. பாதுகாப்பு அம்சங்களில் நிலையாக ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் மற்றும் உறுதியான சேசிஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ஆட்டோமேட்டிக் வேரியன்ட் ஒரு லிட்டருக்கு சுமார் 19.05 கி.மீ. வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்: Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்

3. டாடா பஞ்ச்

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான மற்றும் அதிகம் விற்பனையாகும் மைக்ரோ எஸ்யுவிகளில் ஒன்றான டாடா பஞ்ச், முதல்முறையாக எஸ்யுவியை வாங்க விரும்புவோருக்கான முதன்மையான தேர்வாக உள்ளது. இதன் ஆட்டோமேட்டிக் வரிசையானது, ப்யூர் பிளஸ் ஏஎம்டி வேரியண்ட்டில் ரூ.7.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது. அதிக க்ரவுண்ட் க்ளியரன்ஸ், எஸ்யுவி போன்ற வடிவமைப்பு மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸின் வசதியுடன், பட்ஜெட்டைக் கருத்தில் கொள்ளும் வாங்குபவர்களுக்கு பஞ்ச் நல்ல தேர்வாக உள்ளது.

டாடா பஞ்ச், 1.2-லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 5-ஸ்பீட் AMT கியர்பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்களில் டச்ஸ்கிரீன் டிஸ்ப்ளே, ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்கான இரட்டை ஏர்பேக்குகள் ஆகியவை அடங்கும். சாலை மற்றும் ஓட்டும் நிலைமைகளைப் பொறுத்து, இந்த ஆட்டோமேட்டிக் மாடல் சுமார் 18.8–20.09 கிமீ மைலேஜை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

4. மாருதி சுசூகி ஸ்விஃப்ட்

மாருதி சுசூகி ஸ்விஃப்ட் தனது ஸ்போர்ட்டியான வடிவமைப்பு, துடிப்பான செயல்திறன் மற்றும் வலுவான மறுவிற்பனை மதிப்பு ஆகியவற்றால் அறியப்படுகிறது. நீண்ட காலமாக இளம் இந்திய வாங்குபவர்களிடையே விருப்பமான தேர்வாக இருந்து வரும், இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டுகளின் விலை VXi AMT மாடலுக்கு ரூ.7.04 லட்சத்தில் தொடங்கி ZXi Plus AMT மாடலுக்கு ரூ.8.65 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் விலை) நீள்கிறது. குறைந்த பட்ஜெட்டில், ஸ்போர்ட்டியான மற்றும் எளிதாக ஓட்டக்கூடிய ஆட்டோமேட்டிக் காரைத் தேடுபவர்களுக்கு, ஸ்விஃப்ட் மிகவும் கவர்ச்சிகரமான தேர்வுகளில் ஒன்றாகும்.

மேம்பட்ட ஓட்டுநர் அனுபவத்தை வழங்கும் முற்றிலும் புதிய 1.2-லிட்டர் Z-சீரிஸ் மூன்று-சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை ஸ்விஃப்ட் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, அனைத்து வேரியண்ட்களிலும் ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் மற்றும் ESP ஆகியவை ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றன. சுசூகி கனெக்ட் மற்றும் ஒரு பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை மற்ற சிறப்பம்சங்களில் அடங்கும். எரிபொருள் சிக்கனத்தைப் பொறுத்தவரை, ஸ்விஃப்ட்டின் ஆட்டோமேட்டிக் வேரியண்ட், ஒரு லிட்டருக்கு 25.75 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

Abp News16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Cheap Automatic Cars: 25KM மைலேஜ், 6 ஏர்பேக்குகள், ப்ரீமியம் அம்சங்கள் - நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் கார்கள்
PulseNews சுருக்கம்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் மலிவு விலை ஆட்டோமேடிக் கார்கள் குறித்து இங்கே காணலாம். இவை 25 கி.மீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள் மற்றும் பல்வேறு ப்ரீமியம் அம்சங்களைக் கொண்டுள்ளன.

சென்னை போன்ற பெருநகரங்களில் நிலவும் போக்குவரத்து நெரிசலில், எளிதாக ஓட்டுவதற்கு ஆட்டோமேடிக் கார்களைப் பொதுமக்கள் விரும்புகின்றனர். இருப்பினும், இந்த கார்களின் விலை மற்றும் மைலேஜ் போன்றவை வாடிக்கையாளர்களிடையே முக்கிய கவனத்திற்குரிய அம்சங்களாக உள்ளன.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology