Car Price Hike: Swift முதல் Victoris வரை..19 கார்களின் விலையை தடாலடியாக உயர்த்திய மாருதி சுசுகி! எந்த வண்டிக்கு எவ்ளோ?

இந்தியாவின் மிகவும் பிரபலமான கார் நிறுவனம் மாருதி சுசுகி. கடந்தாண்டு ஜிஎஸ்டி வரி மாற்றத்திற்கு பிறகு நாட்டில் பல கார் நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையை குறைத்தது. மாருதி சுசுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களின் விலையும் குறைந்தது.

விலை உயர்வு:

இந்த சூழலில், மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எந்தெந்த கார் எவ்வளவு விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பதை கீழே காணலாம்.

1. Alto K10 - ரூபாய் 2, 500 வரை

2. S-Presso - ரூபாய் 2, 500 வரை

3. Celerio - ரூபாய் 2, 500 வரை

4. Swift - ரூபாய் 5000

5.Dzire - ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 7 ஆயிரத்து 500 வரை

6. Tour S - ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 7 ஆயிரத்து 500 வரை

7. Ertiga - ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 7 ஆயிரத்து500 வரை

8.Brezza - ரூபாய் 5 ஆயிரம் வரை

9. Eeco - ரூபாய் 5 ஆயிரம் வரை

10. WagonR - ரூபாய் 2 ஆயிரத்து 500 வரை

11. Victoris - ரூபாய் 10 ஆயிரம் வரை

12. Carry - ரூபாய் 2 ஆயிரத்து 500 வரை

13. Baleno - ரூபாய் 30 ஆயிரம் வரை

14. Fronx - ரூபாய் 7 ஆயிரத்து 500

15. Jimny - ரூபாய் 15 ஆயிரம்

16. XL6 - ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 7 ஆயிரத்து 500 வரை

17. Grand Vitara - ரூபாய் 5 ஆயிரம் வரை

18. eVitara - ரூபாய் 20 ஆயிரம் வரை

19. Invicto - ரூபாய் 10 ஆயிரம் வரை

வாடிக்கையாளர்கள் வேதனை:

இதில் பட்ஜெட் விலை காரான ஆல்டோ, எஸ் ப்ரஸ்ஸோ, சுவிஃப்ட், டிசைர் , பலேனா ஆகிய கார்களின் விலையை உயர்த்தியிருப்பது வாடிக்கையாளர்களுக்கு வேதனையை உண்டாக்கியுள்ளது. சொகுசு காரான விக்டோரியஸ், ஜிம்னி, எக்ஸ்எல்6 ஆகிய கார்களின் விலையையும் மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பலேனா காரின் விலை ரூபாய் 30 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நடுத்தர குடும்பங்கள் குறைந்த விலையில் கார் வாங்க வேண்டும் என்ற கனவை நனவாக்கும் ஆல்டோ, வேகன்ஆர் ஆகிய கார்களின் விலையை முறையே ரூபாய் 5 ஆயிரம் மற்றும் ரூபாய் 2,500 வரை உயர்த்தியுள்ளனர்.

மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்தியிருப்பதால் மற்ற நிறுவனங்களும் தங்களின் கார்களின் விலையை உயர்த்துமோ? என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பட்ஜெட் விலை கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் விலையே இந்தளவு உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மற்ற நிறுவனங்கள் விலை உயர்வு சற்று கலக்கத்தையே வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி மாற்றத்தைத் தொடர்ந்து தனது கார்களின் விலையைக் குறைத்திருந்தது. ஆனால், தற்போது மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக, தனது தயாரிப்புகளின் விலையை மீண்டும் உயர்த்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன்படி ஸ்விஃப்ட் மற்றும் விக்டோரியா உள்ளிட்ட மொத்தம் 19 கார்களின் விலையை மாருதி சுசுகி நிறுவனம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஒவ்வொரு காரின் விலையும் எவ்வளவு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.