PulseNews
தொழில்நுட்பம்

ஷாக் நியூஷ்! விண்ணில் செலுத்தப்பட்ட 85 வினாடிகளில் வெடித்த சிதறிய ராக்கெட்....! தோல்வியில் துவண்டு போன சீனா.... பகீர் காட்சி!!!

சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட லாங் மார்ச் 7A ராக்கெட் ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே வெடித்துச் சிதறியது. ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுதலில், ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான சோங்ஜிங்-4பி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் அழிந்தது. இதனால் செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் சீனாவின் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. 85 வினாடிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தோல்வி சோங்ஜிங்-4பி என்ற தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக லாங் மார்ச் 7A ராக்கெட் பயன்படுத்தப்பட்டது. திட்டமிட்டபடி ஏவுதளம் விட்டு ராக்கெட் புறப்பட்ட நிலையில், 85 வினாடிகளுக்குப் பிறகு திடீரென வெடித்துச் சிதறியது. இதில் ராக்கெட்டும், அதனுள் இருந்த செயற்கைக்கோளும் முற்றிலும் அழிந்தன. இதையும் படிங்க: வங்கிக்கணக்கை வாடகைக்கு விடும் விவகாரம்.. தவெக நிர்வாகி கைது.. தொடரும் கிடுக்குபிடி விசாரணை.! உந்துவிசை பகுதி பிரிவதற்கு முன்பே வெடிப்பு ராக்கெட்டின் உந்துவிசை பகுதி வழக்கமாக பிரிய வேண்டிய கட்டத்தை எட்டுவதற்கு முன்பே வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செயற்கைக்கோளை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான முயற்சி கைகூடவில்லை. வெடிப்புக்கான சரியான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாங் மார்ச் 7A ராக்கெட்டுக்கு 2-வது தோல்வி கடந்த 2020-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கும் லாங் மார்ச் 7A ராக்கெட்டுக்கு இது 2-வது தோல்வியாகும். சீனாவின் விண்வெளித் திட்டங்கள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், முக்கியமான செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தொடங்கிய சில நிமிடங்களிலேயே தோல்வியடைந்திருப்பது கவனத்தை பெற்றுள்ளது.

Tamil Spark14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஷாக் நியூஷ்! விண்ணில் செலுத்தப்பட்ட 85 வினாடிகளில் வெடித்த சிதறிய ராக்கெட்....! தோல்வியில் துவண்டு போன சீனா.... பகீர் காட்சி!!!
PulseNews சுருக்கம்

சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள வென்சாங் விண்வெளி ஏவுதளத்திலிருந்து லாங் மார்ச் 7A ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவப்பட்ட 85 வினாடிகளிலேயே இந்த ராக்கெட் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தினால் ராணுவம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காகக் கொண்டு செல்லப்பட்ட சோங்ஜிங்-4பி தகவல் தொடர்பு செயற்கைக்கோள் முற்றிலும் அழிந்தது. இதன் விளைவாக, செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தும் சீனாவின் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology