PulseNews
தொழில்நுட்பம்

பணம் அனுப்ப இண்டர்நெட் தேவையில்லை; பட்டன் போன்களில் புதிய வசதி

உலக அளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோடிக்கணக்கான மக்கள் ’கூகுள் பே’, ’போன் பே’ உள்ளிட்ட செயலிகள் மூலமாகப் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இணையவசதி இல்லாமல் பணம் அனுப்பும் புதிய வசதியை போன் பே அறிமுகப்படுத்தியுள்ளது. குறிப்பாக, சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பட்டன் போன்களைக் கொண்டும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் ’போன் பே - யுபிஐ 123பே’ என்ற சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நம் நாட்டில் சுமார் 20 கோடிக்கும் அதிகமானோர் பட்டன் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களும் யுபிஐ வசதியைப் பயன்படுத்தும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சேவையை எஸ்எம்எஸ் அடிப்படையிலான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால், இணைய வசதி இல்லாமலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். குறிப்பாகக் குறைந்த அளவிலான 2ஜி இணைப்பு மட்டுமே கிடைக்கும் பகுதிகளிலும் இந்த சேவையைச் செயல்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்த போன் பே செயலி, நோக்கியா, லாவா இன்டர்நேஷனல் மற்றும் ஐடெல் மொபைல் போன்ற உற்பத்தியாளர்களுடனான கூட்டாண்மைகள் மூலம், போன்களில் முன்பே நிறுவப்பட்டோ அல்லது முன்பே பதிவேற்றப்பட்டோ வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
பணம் அனுப்ப இண்டர்நெட் தேவையில்லை; பட்டன் போன்களில் புதிய வசதி
PulseNews சுருக்கம்

தற்போது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் பயன்பாடு உலகம் முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகள் மூலம் கோடிக்கணக்கான மக்கள் பணப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இணைய வசதி இல்லாமலேயே பணப் பரிவர்த்தனை செய்ய உதவும் புதிய வசதியை போன் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 'யுபிஐ 123பே' (UPI 123Pay) என்ற இந்த சேவையின் மூலம், சாதாரண பட்டன் போன்களைப் பயன்படுத்தியே பணப் பரிமாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology