Ola S1Z: இனி நான் தான் கிங்கு..! ரூ.80,000 பட்ஜெட், 301KM ரேஞ்ச் - ஒலாவின் லைட் வெயிட் மின்சார் ஸ்கூட்டர் - அம்சங்கள் எப்படி?

Ola S1Z E Scooter: ஓலா நிறுவனத்தின் புதிய S1Z மின்சார ஸ்கூட்டரின் தொடக்க விலை 79 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓலா S1Z மின்சார ஸ்கூட்டர் - விலை, ரேஞ்ச் விவரங்கள்

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமானது தனது புதிய என்ட்ரி லெவல் ஸ்கூட்டர் ரேஞ்சாக, S1Z மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் பாரத் செல் LFP தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வெகுஜன சந்தைக்கு உருவாக்கப்படும் முதல் மாடல் இதுவாகும். 3.1KWh மற்றும் 5.1KWh என இரண்டு வகையான பேட்டரி ஆப்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக கால சலுகையான இந்த வாகனத்திற்கான விலையானது, பேட்டரிகளின் அடிப்படையில் முறையே ரூ.79,999 மற்றும் ரூ.99,999 (எக்ஸ் - ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 301 கிலோ மீட்டர் வரையிலும், சிறிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 179 கிலோ மீட்டர் வரையிலும் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது.

ஓலா S1Z E-ஸ்கூட்டர் - பேட்டரி தொழில்நுட்பம்

புதிய ஸ்கூட்டர் சீரிஸானது, ஓலா எலெக்ட்ரிக்கின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்தை கணிசமாகக் குறைந்த விலைக்கும் விரிவுபடுத்துகிறது. S1Z ஸ்கூட்டரின் பேட்டரி தொழில்நுட்பமானது, ப்ராண்டின் 46-சீரிஸ் LFP செல் ப்ளாட்ஃபார்மிலிருந்து பெறப்படுகிறது. இது அந்நிறுவனத்தின் பேட்டரி புத்தாக்க மையத்தில் உருவாக்கப்பட்டு, அதன் ஓலா ஜிகா ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இது மின்சார வாகனத்தின் மிகவும் விலையுயர்ந்த பாகங்களில் ஒன்றின் மீது ஓலாவுக்கு அதிகக் கட்டுப்பாட்டை அளிப்பதோடு, பேட்டரி செலவுகளையும் குறைக்க உதவுகிறது.

ஓலா S1Z E-ஸ்கூட்டர் - டிசைன் விவரங்கள்:

ஸ்கூட்டருக்கான LFP தொழில்நுட்பமானது, மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் நீண்ட ஆயுட்காலம் போன்ற சிறப்பம்சங்களையும் வழங்குகிறது. இரண்டு S1Z மாடல்களும் 12 இன்ச் சக்கரங்களில் இயங்குவதை போன்று அவற்றுக்கிடையே பல ஒற்றுமைகளும் உள்ளன. அதே சமயம், அவற்றின் பேட்டரி திறன், கூறப்படும் பயண வரம்பைத் தீர்மானிக்கிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், S1Z மாடலை வெள்ளை, ஆந்த்ராசைட், ஸ்கை ஸ்பிளாஷ் ப்ளூ மற்றும் மட்சா கிரீன் ஆகிய வண்ணங்களில் வழங்குகிறது. இந்த வாகனத்தின் மொத்த எடை 123 முதல் 132 கிலோ இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா S1Z E-ஸ்கூட்டர் - தொழில்நுட்ப அம்சங்கள்

S1Z ஸ்கூட்டரானது பல கனெக்டட் மற்றும் ஓட்டுநர் சார்ந்த செயல்பாடுகளைப் பெறுவதால், இதன் மென்பொருள் தொகுப்பு MoveOS 5-இலிருந்து வருகிறது. வாகனத்தின் உபகரணப் பட்டியலில் க்ரூஸ் கன்ட்ரோல், ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், ரிவர்ஸ் மோட், ஜிபிஎஸ் மற்றும் ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்ஸ் ஆகியவையும் உள்ளன. இதுபோக ஓலா எலெக்ட்ரிக் செயலி மூலம் வழங்கப்படும் ஜியோ-ஃபென்சிங், டைம் ஃபென்சிங், மோட் ஃபென்சிங், பயணப் புள்ளிவிவரங்கள் மற்றும் ஆற்றல் குறித்த தகவல்களும் கிடைக்கும். இந்த ஸ்கூட்டரில் 'ஈஸி பார்க்' வசதியும் உள்ளது, இது மணிக்கட்டை (Wrist) கொண்டு கட்டுப்படுத்தப்படும் அமைப்பு மூலம் குறுகலான பார்க்கிங் இடங்களில் எளிதாக வாகனத்தை நிறுத்த உதவுகிறது. இந்நிறுவனம் தனது பாரத் செல் LFP தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கி, அதைத் தனது சொந்த வாகன ப்ளாட்ஃபார்முடன் நேரடியாக இணைத்துள்ளது. ஏனெனில் இந்த செங்குத்து ஒருங்கிணைப்பு பேட்டரி செலவுகளைக் குறைக்கும்.

இதையும் படியுங்கள்: Mahindra BaaS: XEV 9S, XEV 9e SUV-க்களின் விலையை லட்சங்களில் குறைத்த மஹிந்த்ரா - என்ன மாற்றம்? காரணம் என்ன?

ஓலா S1Z E-ஸ்கூட்டர் - விநியோகம் எப்போது?

ஓலா எலெக்ட்ரிக் தனது சில்லறை விற்பனை விரிவாக்கத்தின் அடுத்த கட்டமாக தான் S1Z மாடலையும் அறிமுகப்படுத்துகிறது. டீலர்களால் இயக்கப்படும் கடைகள் மூலம் நுகர்வோரைச் சென்றடையும் முதல் தயாரிப்புகளில் இந்த மாடலும் ஒன்றாகும். நிறுவனம் தனது நேரடி விற்பனை தளங்களை விரிவுபடுத்துவதால், இந்தியா முழுவதும் ஓலா தயாரிப்புகளுக்கான அணுகலை அதிகரிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறிய பேட்டரி எடிஷனுக்கான வாடிக்கையாளர் விநியோகம் டிசம்பர் 2026-இல் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து 5.1 kWh மாடல் மார்ச் 2027-இல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா நிறுவனம் தனது புதிய என்ட்ரி லெவல் மின்சார ஸ்கூட்டரான S1Z-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை 79 ஆயிரத்து 999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பாரத் செல் LFP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் மாடல் இதுவாகும். இந்த ஸ்கூட்டர் 3.1KWh மற்றும் 5.1KWh என இரண்டு வகையான பேட்டரி தேர்வுகளில் கிடைக்கிறது.