35 டிபி ஏ.என்.சி, 52 மணி நேர பிளேபேக்: பட்ஜெட் விலையில் பட்டையைக் கிளப்பும் சி.எம்.எப் பட்ஸ் நியோ
நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான சிஎம்எப்-ன் புதிய இயர்பட்ஸ் மாடலான ‘சி.எம்.எப் பட்ஸ் நியோ’ (CMF Buds Neo) இந்தியச் சந்தையில் முறைப்படி விற்பனைக்கு வந்துள்ளது. புதுமையான வடிவமைப்பு, 35dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் 52 மணி நேர பிளேபேக் திறன் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த இயர்பட்ஸ் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 20 அன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த இயர்பட்ஸ், தற்போது பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தனது முதல் விற்பனையைத் (First Sale) தொடங்கியுள்ளது. விலை ரூ.1,999/- பிளாக் (Black), ஒயிட் (White) மற்றும் டார்க் ப்ளூ (Dark Blue) ஆகிய 3 வண்ணங்களில் கிடைக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் கிரெடிட் கார்டு கிப்ட் வவுச்சர் சலுகைகளுடன் கிடைப்பதோடு, குரோமா (Croma), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) மற்றும் விஜய் சேல்ஸ் (Vijay Sales) ஆகிய முன்னணி விற்பனையகங்களிலும் வாங்கிக் கொள்ளலாம். சிறப்பம்சங்கள் (Specifications) இயர்பட்களில் 45mAh பேட்டரியும், சார்ஜிங் கேஸில் 460mAh பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளன. இயல்பான பயன்பாட்டில் 11 மணி நேரமும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) இயக்கத்தில் இருக்கும்போது 8 மணி நேரமும் பிளேபேக் கிடைக்கும். சார்ஜிங் கேஸுடன் சேர்த்து இயல்பான முறையில் 52 மணி நேரமும், ANC ஆன் செய்யப்பட்ட நிலையில் 30 மணி நேரமும் செயல்படும். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 5.5 மணி நேர பிளேபேக் கிடைக்கும். இதில் டைப்-சி (Type-C) சார்ஜிங் வசதி உண்டு (வயர்லெஸ் சார்ஜிங் வசதி இல்லை). டைட்டானியம்-கோடெட் பிஇடி டோம் (Titanium Coated PET Dome) கொண்ட 12.4 மிமீ டைனாமிக் டிரைவர்கள் பொருத்தப்பட்டுள்ளன. தெளிவான அழைப்புகளுக்காக 4 மைக்குகள், கிளியர் வாய்ஸ் டெக்னாலஜி (Clear Voice Technology) மற்றும் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (ENC) வசதிகள் உள்ளன. தேவையில்லாத இரைச்சல்களைத் தவிர்க்க 35dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டீரியோ ஆடியோ அனுபவத்திற்காக ஸ்டாடிக் ஸ்பாஷியல் ஆடியோ (Static Spatial Audio) மற்றும் கஸ்டம் ஈகியூ (Custom EQ) வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ளூடூத் வி6.0 (Bluetooth v6.0) இணைப்புடன், AAC மற்றும் SBC ஆடியோ கோடெக்குகளை ஆதரிக்கிறது. எளிதான இணைப்பிற்கு கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் மைக்ரோசாப்ட் ஸ்விஃப்ட் பேர் (Microsoft Swift Pair) சப்போர்ட் உண்டு. ஜியோமெட்ரிக் ஸ்கொயர் (Geometric Square) வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பாதுகாப்புத் தரத்தைப் பொறுத்தவரை, இயர்பட்களுக்கு IP55 ரேட்டிங்கும், சார்ஜிங் கேஸுக்கு IPX2 ரேட்டிங்கும் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், டச் கன்ட்ரோல், கேமிங் மோட் (Gaming Mode) மற்றும் நத்திங் எக்ஸ் ஆப் (Nothing X App) ஆதரவு ஆகியவையும் இதில் அடங்கும்.

நத்திங் நிறுவனத்தின் துணை பிராண்டான சி.எம்.எப், தனது புதிய ‘சி.எம்.எப் பட்ஸ் நியோ’ இயர்பட்ஸ்களை இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனம், தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தனது முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது.
35 டிபி ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் 52 மணி நேர பிளேபேக் திறன் கொண்ட இந்த இயர்பட்ஸ், புதுமையான வடிவமைப்பில் வெளியாகியுள்ளது. பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும் இந்த தயாரிப்பு, ரூ.1,999 என்ற பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.