PulseNews
தொழில்நுட்பம்

அசத்தலாக அறிமுகமான MG Hector Tomahawk: EV, PHEV- எது பெஸ்ட்? மைலேஜ், விலை, டிசைன்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுஸுகி, டாடா, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ள நிலையில், எம்.ஜி நிறுவனமும் தனது இடத்தை படிப்படியாக வலுப்படுத்தி வருகிறது. சமீபத்தில், எம்.ஜி நிறுவனம் தனது புதிய எஸ்யூவி மாடலான டொமஹாக் (Tomahawk) காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

எலக்ட்ரிக் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) என இரண்டு வேரியண்ட்களில் வெளிவந்துள்ள இந்த காரில் எதை வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும் என்ற விவரத்தைப் பார்ப்போம்.

விலை எவ்வளவு?

ஹெக்டர் டொமஹாக் எலக்ட்ரிக் மாடலின் தொடக்க விலை ₹19.4 லட்சமாகவும், ஹைப்ரிட் (PHEV) மாடலின் விலை ₹25.7 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் BaaS திட்டத்தை தேர்வு செய்தால், இ.வி. மாடலை வெறும் ₹13.9 லட்சத்திற்கும், பிஎச்இவி மாடலை ₹21.7 லட்சத்திற்கும் வாங்க முடியும்.

இத்திட்டத்தில் இ.வி. காருக்கு கிலோ மீட்டருக்கு ₹4.90-ம், பிஎச்இவி காருக்கு கிலோ மீட்டருக்கு ₹3.20-ம் பேட்டரி வாடகையாகச் செலுத்த வேண்டும். தொடக்க விலையைப் பொறுத்தவரை இ.வி. மாடலே மலிவானது.

ரேஞ்ச் எப்படி?

ரேஞ்ச் அடிப்படையில் ஹைப்ரிட் மாடல் முன்னிலையில் உள்ளது. இது முழு டேங்க் எரிபொருளில் 1,100 கி.மீ வரை பயணிக்கும் என்றும், 40 கி.மீ மைலேஜ் தரும் என்றும் நிறுவனம் கூறுகிறது. அதேசமயம், எலக்ட்ரிக் மாடல் முழு சார்ஜில் 517 கி.மீ ரேஞ்ச் வழங்குகிறது.

இவி மாடல் சிங்கிள் மோட்டாருடன் 204 hp பவரையும், பிஎச்இவி மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருடன் 198 bhp பவரையும் வெளிப்படுத்துகின்றன. ஹைப்ரிட் காரை எலக்ட்ரிக் மோடில் மட்டும் 115 கி.மீ வரை ஓட்ட முடியும்.

வடிவமைப்பு மற்றும் வசதிகள்

இரண்டு கார்களும் ஒரே அளவைக் கொண்டிருந்தாலும், வடிவமைப்பில் சிறிய மாற்றங்கள் உள்ளன. இவி மாடல் மூடப்பட்ட மென்மையான முன்புற கிரில்லையும், ஹைப்ரிட் மாடல் சற்று முரட்டுத்தனமான முன்புற அமைப்பிலும் காட்சியளிக்கின்றன. அலாய் வீல்களின் டிசைனும் வேறுபட்டுள்ளன.

இவி மாடலில் பெரிய பேட்டரி உள்ளதால் சீட்டிங் அமைப்பில் சற்று மாற்றம் உள்ளதுடன், 'V2L' வசதியும் இடம்பெற்றுள்ளது. இவி மாடல் 5 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களிலும், ஹைப்ரிட் மாடல் 7 சீட்டரில் மட்டுமே கிடைக்கிறது.

எது பெஸ்ட்?

நீங்கள் நெடுஞ்சாலைகளில் அதிகம் பயணிப்பவராகவும், சார்ஜிங் நிலையங்களில் காத்திருக்க விரும்பாதவராகவும் இருந்தால் ஹைப்ரிட் மாடல் சிறந்த தேர்வு. மாறாக, தினமும் வீட்டில் சார்ஜ் செய்து நகரத்திற்குள் மட்டுமே பயணிப்பீர்கள் என்றால், குறைந்த விலையில் கிடைக்கும் எலக்ட்ரிக் மாடலை வாங்குவதே லாபகரமானதாக இருக்கும்.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
அசத்தலாக அறிமுகமான MG Hector Tomahawk: EV, PHEV- எது பெஸ்ட்? மைலேஜ், விலை, டிசைன்!
PulseNews சுருக்கம்

இந்திய வாகனச் சந்தையில் மாருதி சுஸுகி, டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் ஆதிக்கம் நிலவும் சூழலில், எம்.ஜி நிறுவனம் தனது புதிய டொமஹாக் (Tomahawk) எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் தனது சந்தை நிலையை மேலும் வலுப்படுத்த முயன்று வருகிறது.

இந்த புதிய கார் எலக்ட்ரிக் (EV) மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) ஆகிய இருவேறு வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றில் எந்த மாடலைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது என்பதற்கான விலை, மைலேஜ் மற்றும் வடிவமைப்பு குறித்த ஒப்பீட்டுத் தகவல்களைப் பார்ப்பது அவசியமாகும்.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology