PulseNews
தொழில்நுட்பம்

Safest SUV: டாடாவால் முடியாத பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்பான எஸ்யுவி - தென்கொரிய மாடலின் முழு விவரம்

Kia Safest SUV Seltos: இந்திய ஆட்டோமொபைல் கியா நிறுவனத்தின் மிகவும் பாதுகாப்பான எஸ்யுவியை விற்பனை செய்து வருகிறது.

ரூ.22 லட்சம் பட்ஜெட்டில் மிகவும் பாதுகாப்பான கார்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பாதுகாப்பான கார் மற்றும் எஸ்யுவி என்றாலே டாடா நிறுவனம் தான் பெரும்பாலானோருக்கு நினைவு வரும். காரணம் தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு இந்த உள்ளூர் நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறது. அதேநேரம், உள்ளூர் சந்தையில் பாதுகாப்பு பரிசோதனையில் குறைந்தது 10 கார் மாடல்கள் ஐந்து ஸ்டார் ரேட்டிங்கை பெற்றிருந்தாலும், அவற்றின் தனிப்பட்ட பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மதிப்பெண்களில்தான் வேறுபாடு உள்ளது. இந்த மதிப்பெண்களை ஒப்பிட்டுப் பார்த்தால், டாடா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இல்லை. பாரத் NCAP-இன் படி, ரூ. 22 லட்சத்திற்கும் குறைவான விலையில் இந்தியாவில் உள்ள மிகவும் பாதுகாப்பான இன்ஜின் எடிஷன் எஸ்யுவிக்களை பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.

கியா செல்டோஸ் - பாதுகாப்பான SUV

இந்தியாவில் அதிகபட்ச தனிநபர் பாதுகாப்பு மதிப்பெண்களைக் கொண்ட மிகவும் பாதுகாப்பான இன்ஜின் எடிஷன் SUV கியா நிறுவனத்தின் ப்ராண்டை சேர்ந்ததாகும். அதன்படி செல்டோஸ் ஆனது வயது வந்தோர் பயணிப் பாதுகாப்பில 32-க்கு 31.7 என்ற கிட்டத்தட்ட முழுமையான மதிப்பெண்ணையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49-க்கு 45 என்ற மதிப்பெண்ணையும் பெற்றுள்ளது. இது 81-க்கு 76.7 என்ற ஒருங்கிணைந்த மதிப்பெண்ணையும், 5 ஸ்டார் ரேட்டிங்கையும் அளிக்கிறது.

பாரத் NCAP பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் மாடல்கள், அதன் அடிப்படை மற்றும் நடுத்தர மாடல்களான 1.5-லிட்டர் டீசல் AT HTE (O) மற்றும் GTX ஆகும். முன்பக்க ஆஃப்செட் நெகிழ்வுத் தடுப்புச் சோதனையில், ஓட்டுநரின் கால்கள் மற்றும் இடது கணுக்காலுக்கான பாதுகாப்பு 'போதுமானது' என்ற மதிப்பீட்டைப் பெற்றது, இருப்பினும் மேம்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது. இதைத் தவிர, மற்ற அனைத்து சோதனை வகைகளிலும் செல்டோஸ் 'நல்லது' என்ற மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

கியா செல்டோஸ் பாதுகாப்பு அம்சங்கள்

ஸ்டேண்டர்டாக, கியா செல்டோஸ் 24 பாதுகாப்பு அம்சங்கள் வரை கொண்டுள்ளது. இவற்றில் முன்பக்க இரட்டை, பக்கவாட்டு மற்றும் கர்டன் ஏர்பேக்குகள், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஷ்டம், ஆண்டி லாக் ப்ரேகிங் சிஸ்டம், ESC, VSM, நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் ப்ரேக்குகள், பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், பின்பக்க ISOFIX குழந்தை இருக்கை மவுண்ட்கள், டவுன்ஹில் ப்ரேக் கன்ட்ரோல் (DBC), டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்பக்க கேமரா போன்றவை அடங்கும்.

HTX (A) ட்ரிம் முதல், 21 வகையான தானியங்கி பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல்-2 ADAS கிடைக்கிறது. இதில் 360-டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டரும் அடங்கும். ஸ்டாப் அண்ட் கோ அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களுக்கு மட்டுமே பிரத்யேகமானது. டாப்-ஸ்பெக் GTX (O) டிரிம், 28 வகையான தானியங்கி பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லெவல் 2+ ADAS-ஐப் பெறுகிறது.

இதையும் படியுங்கள்: Budget EMI Cars: ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவான EMI-யில் கிடைக்கும் 10 கார்கள் - விலை, வட்டி, தவணை - முழு விவரம்

மஹிந்த்ரா தார் ராக்ஸ்:

ரூ.10.99 லட்சத்தில் தொடங்கி ரூ.24.70 லட்சம் வரை இந்த காரின் விலை நீள்கிறது. பெட்ரோல், டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் என மூன்று வகையான இன்ஜின் ஆப்ஷன்களில் இந்த கார் கிடைக்கிறது. அதிகபட்சமாக டீசல் எடிஷன் லிட்டருக்கு 19 கிலோ மீட்டர் மைலேஜ் அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்தப் பட்டியலில் இரண்டாவதாக மஹிந்தத்ரா தார் ராக்ஸ் உள்ளது , 76.09 (81க்கு) என்ற ஒருங்கிணைந்த மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது. இது செல்டோஸை விட மிகச் சிறிய வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது. மூன்றாம் இடத்தில் , ஸ்கோடாவின் தற்போதைய அதிகம் விற்பனையாகும் மாடலான கைலாக் , 75.88 என்ற ஒருங்கிணைந்த மதிப்பெண்ணுடன் உள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Safest SUV: டாடாவால் முடியாத பட்ஜெட்டில் நாட்டின் பாதுகாப்பான எஸ்யுவி - தென்கொரிய மாடலின் முழு விவரம்
PulseNews சுருக்கம்

இந்திய கார் சந்தையில் டாடா நிறுவனத்தின் வாகனங்கள் பாதுகாப்புக்கு பெயர் பெற்றவை. அந்த வரிசையில், கியா நிறுவனம் தனது பாதுகாப்பான எஸ்யுவி மாடலான செல்டோஸை 22 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் விற்பனை செய்து வருகிறது.

பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த கியா செல்டோஸ் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தின் கார்களுக்கு இணையாக, பாதுகாப்பு பரிசோதனைகளில் சிறந்து விளங்கும் வகையில் இந்த தென்கொரிய மாடல் சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology