PulseNews
தொழில்நுட்பம்

3 முறை எகிறிக் குதித்து வானில் பறந்த உலகின் முதல் பறவை: வெளிவந்த 150 மில்லியன் ஆண்டு வரலாறு

பறவைகளின் பரிணாம வளர்ச்சியில் உலகின் முதல் பறவையாகக் கருதப்படும் 'ஆர்க்கியோப்டெரிக்ஸ்' எவ்வாறு பறக்க தொடங்கியது என்பது குறித்த பல ஆண்டுகால புதிருக்கு புதிய ஆய்வொன்று புத்துயிர் ஊட்டியுள்ளதுஇந்த ஆதி பறவை தனது சிறகுகளை மட்டும் அடித்து உடனடியாக பறக்கவில்லை; மாறாகத் தனது சக்திவாய்ந்த கால்களால் 3 அல்லது 3 முறை எகிறிக் குதித்த பின்னரே (Leaps) வானில் பறக்கத் தொடங்கி இருக்கலாம் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. 'Developmental Biology' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, ஆர்க்கியோப்டெரிக்ஸ் பறவை சிறகுகளை படபடத்து ஒரே தாவலில் வானில் பறக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. காற்றில் பறப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச வேகத்தைப் பெறுவதற்கு அது தனது கால்களைப் பெருமளவில் நம்பியிருந்தது. போதுமான வேகம் கிடைத்த பின்னரே அதன் சிறகுகள் பறக்கும் பணி மேற்கொண்டன என்று விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர். இது, இந்த ஆதிப் பறவை ஒரே இறக்கைத் தாவலில் வானில் பறந்திருக்கக்கூடும் என்ற நீண்டகால நம்பிக்கையை மாற்றியமைத்துள்ளது. சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த ஆர்க்கியோப்டெரிக்ஸ் பறவையின் உடல் அமைப்பை, தற்காலத்தில் வாழும் காகங்கள், மேக்பை, கடல் புறாக்கள் மற்றும் குருவிகள் போன்ற பறவைகளின் பறக்கும் இயக்கவியல் மாடல்களுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்படி, சுமார் 400 கிராம் எடை கொண்ட நடுத்தர அளவிலான ஆர்க்கியோப்டெரிக்ஸ் பறவையானது. 3 முறை தொடர்ச்சியாக கால்களால் எகிறிக் குதிப்பதன் மூலமாகவோ அல்லது 2 முறை கால்களால் குதித்து, அந்தத் தாவல்களுக்கு இடையில் ஒருமுறை சிறகை கீழ்நோக்கி அடிப்பதன் மூலமாகவோ, விநாடிக்கு 7 மீட்டர் (மணிக்கு 16 மைல்) என்ற தொடர்ச்சியான பறக்கும் வேகத்தை எட்டியிருக்க முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆர்க்கியோப்டெரிக்ஸ் பறவையின் பின்பக்க கால்களே பறக்கத் தொடங்குவதற்குத் தேவையான பெரும்பான்மையான உந்துவிசையை உருவாக்கின. பறவை ஓடி வேகம் எடுத்த பிறகே அதன் சிறகுகள் முக்கிய பங்காற்றின. நவீன காலப் பறவைபோல ஆர்க்கியோப்டெரிக்ஸுக்கு வலுவான மார்பெலும்பு (Keeled sternum) இல்லாததாலும், தோள்பட்டையின் நெகிழ்வுத்தன்மை குறைவாக இருந்ததாலும், தற்காலப் பறவைகள் போல ஒரே வீச்சில் சக்திவாய்ந்த முறையில் சிறகுகளை அடித்துப் பறக்க அதனால் இயலவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர். ஆய்வாளர்கள் ஆர்க்கியோப்டெரிக்ஸ் பறக்கும் தொடக்கத்திற்கு இரண்டு முக்கிய முறைகளை முன்மொழிகின்றனர். குதித்தல், குதித்தல், குதித்தல் தொடர்ந்து சிறகுகளை அடித்துப் பறத்தல். குதித்தல், சிறகடித்தல், மீண்டும் குதித்தல் பின்னர் சிறகுகளை அடித்துப் பறத்தல். இன்றைய நவீன பறவைகளும் கூட எந்தவித அச்சுறுத்தலும் இல்லாத சாதாரண சூழல்களில் பறக்கத் தொடங்கும் போது பலமுறை துள்ளித் குதித்து வேகம் எடுப்பதை நாம் பார்க்கலாம். பரிணாம வளர்ச்சியின் ஆழமான தொடர்பை காட்டுகிறது. தரையில் ஓடிய டைனோசர்களுக்கும், வானில் சுதந்திரமாகப் பறக்கும் தற்கால நவீன பறவைகளுக்கும் இடைப்பட்ட பரிணாம வளர்ச்சிப் பாலமாக ஆர்க்கியோப்டெரிக்ஸின் இந்த ‘குதித்துப் பறக்கும்’ உத்தி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர்.

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
3 முறை எகிறிக் குதித்து வானில் பறந்த உலகின் முதல் பறவை: வெளிவந்த 150 மில்லியன் ஆண்டு வரலாறு
PulseNews சுருக்கம்

பறவைகளின் பரிணாம வளர்ச்சியில் உலகின் முதல் பறவையாகக் கருதப்படும் ‘ஆர்க்கியோப்டெரிக்ஸ்’ எவ்வாறு பறக்கத் தொடங்கியது என்பது குறித்த பல ஆண்டுகால மர்மத்திற்கு புதிய ஆய்வு ஒன்று விடை கண்டுள்ளது. இந்த ஆதி பறவை தனது சிறகுகளை மட்டும் அடித்து பறக்கத் தொடங்கவில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது சக்திவாய்ந்த கால்களைப் பயன்படுத்தி மூன்று முறை எகிறிக் குதித்த பின்னரே, இந்த பறவை வானில் பறக்கத் தொடங்கியிருக்கலாம் என 'டெவலப்மெண்டல் பயாலஜி' (Developmental Biology) இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது. 150 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த பறவையின் பறக்கும் முறை குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology