PulseNews
தொழில்நுட்பம்

Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?

ஒவ்வொரு கார் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக மாதம்தோறும் தள்ளுபடி அறிவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனம் தனது கார்களுக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடியை அறிவித்துள்ளது.

மஹிந்திராவின் எந்தெந்த காருக்கு எவ்வளவு தள்ளுபடி? என்பதை கீழே காணலாம்.

1. Scorpio N - ரூபாய் 1.25 லட்சம்

2. Thar Roxx - ரூபாய் 1.20 லட்சம்

3. Scorpio Classic - ரூபாய் 75 ஆயிரம்

4. Thar - ரூபாய் 50 ஆயிரம்

5. Bolero Neo / Neo Plus - ரூபாய் 45 ஆயிரம்

6. XUV 3XO - ரூபாய் 40 ஆயிரம்

மேலே கூறிய கார்களுக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடியாக இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது.

1.Scorpio N:

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் புகழ்பெற்ற காராக இருப்பது இந்த Scorpio N. இந்த காருக்கு ஆகஸ்ட் மாத தள்ளுபடியாக ரூபாய் 1.25 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு ரூபாய் 1 லட்சம் ரொக்கத் தள்ளுபடியாகவும், ரூபாய் 25 ஆயிரம் அசெசரி தள்ளுபடியாகவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 17.23 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 32.28 லட்சம் ஆகும். 1997 சிசி பெட்ரோல் எஞ்ஜினும், 2184 சிசி டீசல் எஞ்ஜினும் பொருத்தப்பட்ட காராக உள்ளது.

2. Thar Roxx:

மஹிந்திராவின் புகழ்பெற்ற காராக திகழ்வது Thar Roxx. இந்த காருக்கு ஆகஸ்ட் தள்ளுபடியாக ரூபாய் 1.20 லட்சம் ஆகும். இந்த காருக்கு 92 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு 28 ஆயிரம் செராமிக் கோட்டிங் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 15.80 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 29.83 லட்சம் ஆகும். இதில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின், 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

3.Scorpio Classic:

மஹிந்திராவின் மற்றொரு புகழ்பெற்ற கார் இந்த Scorpio Classic. இந்த காருக்கு ஆகஸ்ட் தள்ளுபடியாக ரூபாய் 75 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூபாய் 50 ஆயிரம் ரொக்கத் தள்ளுபடியும், 25 ஆயிரம் அசெசரியும் அளிக்கப்பட்டுள்ளது. 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 16.84 லட்சமும், இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 21.84 லட்சம் ஆகும். இதில் மொத்தம் 4 வேரியண்ட் பொருத்தப்பட்டுள்ளது.

4. Thar:

மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற ஆஃப் ரோட் கார் இந்த Thar ஆகும். இந்த காருக்கு 50 ஆயிரம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி முழுவதும் ரொக்கமாக தள்ளுபடியாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 12.90 லட்சம் ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 22.56 லட்சம் ஆகும். 2.0 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் உள்ளது. 7 வேரியண்ட் இதில் உள்ளது.

5. Bolero Neo Plus:

மஹிந்திராவின் புகழ்பெற்ற காரில் ஒன்று Bolero. இந்த Bolero Neo Plus காருக்கு ரூபாய் 45 ஆயிரம் வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி முழுவதும் ரொக்கமாக அளிக்கப்படுகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 14.41 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 15.76 லட்சம் ஆகும். 2184 சிசி எஞ்ஜின் டீசல் வேரியண்ட் உள்ளது.

6.XUV 3XO:

மஹிந்திராவின் மிகவும் புகழ்பெற்ற எஸ்யூவி காராக இருப்பது XUV 3XO. இந்த காருக்கு ஆகஸ்ட் தள்ளுபடியாக ரூபாய் 40 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 9.30 லட்சம் ஆகும். இந்த காரின் டாப் வேரியண்ட் ரூபாய் 18.73 லட்சம் ஆகும். இந்த காரில் 1197 சிசி எஞ்ஜின், இந்த காரில் 1497 சிசி டர்போ டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

Abp News15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Mahindra Car Offers: ரூபாய் 1.25 லட்சம் ஆஃபர்.. 6 கார்களுக்கு தள்ளுபடியை அள்ளித் தந்த மஹிந்திரா - எந்தெந்த காருக்கு?
PulseNews சுருக்கம்

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு மாதமும் கார் நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை மஹிந்திரா நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, ஸ்கார்பியோ என் மாடலுக்கு ரூ. 1.25 லட்சம் வரையிலும், தார் ராக்ஸ் காருக்கு ரூ. 1.20 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஸ்கார்பியோ கிளாசிக் மாடலுக்கு ரூ. 75 ஆயிரம், தார் காருக்கு ரூ. 50 ஆயிரம் மற்றும் பொலேரோ நியோ/நியோ பிளஸ் மாடல்களுக்கு ரூ. 45 ஆயிரம் என மொத்தம் 6 கார்களுக்கு மஹிந்திரா நிறுவனம் சலுகைகளை அறிவித்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#technology