“ஏற்கெனவே வைத்திருப்பவர்களுக்கு ஏன் கார்?” - அன்புமணி கேள்வி!
சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை தமிழக முதல்வர் விஜய் இன்று (19.08.2026) வெளியிட்டார். அதில் குறிப்பாக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது மக்கள் பணியை தோய்வின்றி தொடர்வதற்கும், அவர்கள் தங்களின் தொகுதி பணிகளை திறம்பட மேற்கொள்வதற்கு வசதியாக, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்கப்படும் என்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக செலவிற்காக மாதம் தோறும் ரூ.75,000 வாகன படியாகவும், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதந்தோறும் ரூ.25,000 உதவியாளர் படியாகவும் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில் ஏற்கெனவே கார் வைத்திருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு ஏன் கார்? என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சி சார்பில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அரசினுடைய கொள்கை. கார் இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வாங்கிக் கொடுக்கலாம். கார் இருக்கிறவர்களுக்கு தேவையில்லை. நிறைய பேர் பஸ்சில் வருகிறார்கள் என சொல்கிறார்கள். நிதி பற்றாக்குறை இருக்கிறது, அதற்கு ஏற்ற மாதிரி நடந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் இன்று (19.08.2026) பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வதற்காக, அரசு சார்பில் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படும் என்றும், வாகனப் பராமரிப்புச் செலவிற்காக மாதம் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, ஏற்கனவே வாகனங்களை வைத்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதற்காக அரசு வாகனம் வழங்க வேண்டும் என்று தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.