கெட்டப்பை மாத்தி... யாருமே பாக்காத கெட்டப்பில் அறிமுகமாகிய Honda Rebel 300 ! தொடங்கியது முன்பதிவு - விலை எவ்ளோ?

இந்தியாவின் மிகவும் பிரபலமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹோண்டா. இவர்களின் இரு சக்கர வாகனங்களுக்கு என்று இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

Honda Rebel 300:

இவர்களின் புதிய படைப்பாக Honda Rebel 300 பைக் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான ஹோண்டா பைக்கின் வடிவம் இல்லாமல் முற்றிலும் புதிய வடிவத்தில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹோண்டாவின் இந்த புதிய Honda Rebel 300 பைக்கின் விலை ரூபாய் 2 லட்சத்து 22 ஆயிரம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். இதன் இ கிளட்ச் வெர்சன் விலை ரூபாய் 2 லட்சத்து 62 ஆயிரம்.

சிறப்புகள்:

தற்போது இதன் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன் முன்பதிவு ரூபாய் 5 ஆயிரத்தில் இருந்து தொடங்கியுள்ளது. 286 சிசி லிக்யூட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 30 எச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 27.5 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. ஏபிஎஸ் டூயல் சேனல் ப்ரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் தற்போது முன்பதிவு செய்தால் வரும் அக்டோபர் இடைப்பகுதியில் டெலிவரி செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. ஜிபிஎஸ் நேவிகேஷன் வசதி உள்ளது. முன்பக்கமும், பின்பக்கமும் டிஸ்க் ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

வசதிகள்:

இதன் தோற்றம் ராயல் என்ஃபீல்ட் மீடோர் 350 பைக்கைப் போல உள்ளது. ஹோண்டாவின் இந்த புதிய பைக் நெடு்ந்தூர பயணத்திற்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சக்கரங்களும் அலாய் சக்கரங்களாகவே பொருத்தப்பட்டுள்ளது.

மேனுவல் வேரியண்ட் மட்டுமின்றி இ கிளட்ச் வேரியண்டும் உள்ளது. 286 சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளதால் இதன் மைலேஜ் மற்ற ஹோண்டா இரு சக்கர வாகனங்கள் அளவிற்கு இருக்காது. ஆனாலும், நெடுஞ்சாலையில் சீறிப்பாயும் ஒரு பைக்காக இந்த Honda Rebel 300 பைக் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை:

முற்றிலும் புதிய வடிவத்தில் உள்ள இந்த Honda Rebel 300 பைக் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. எக்ஸ் ஷோ ரூம் விலையே ரூபாய் 2.22 லட்சமாக இருப்பதால் இதன் ஆன் ரோட் விலை ரூபாய் ரூபாய் 2.50 லட்சம் இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன் இ கிளட்ச் வேரியண்ட் ஆன் ரோட் விலை ரூபாய் 3 லட்சம் வரை நெருங்கும் என்று கருதப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டா, தனது புதிய தயாரிப்பான 'ரெபெல் 300' (Rebel 300) பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத முற்றிலும் புதிய வடிவமைப்புடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவின் இந்த புதிய ரக பைக்கிற்கு முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.