அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் 3.0: ஏசி, ஏசி இல்லாத பெட்டிகளுடன் ஐ.சி.எஃப்-லிருந்து தொடங்கியது முதல் ரயில்
சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த இணைப்புப் பெட்டி தொழிற்சாலையிலிருந்து (ICF) முதல் அம்ரித் பாரத் 3.0 ரயில் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய ரயிலில் ஏசி (AC) மற்றும் ஏசி இல்லாத (Non-AC) பெட்டிகள் இரண்டும் இடம் பெற்றுள்ளன. தற்சமயம் இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் ஏசி இல்லாத பெட்டிகளைக் கொண்ட சுமார் 60 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் பேசுகையில், இந்த ரயில் ICF-லிருந்து அனுப்பப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். மேலும், முதல் அம்ரித் பாரத் 3.0 ரயில் எந்தப் பாதையில் இயக்கப்படும் என்பதை ரயில்வே வாரியம் தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். முதல் அம்ரித் பாரத் 3.0 ரயிலில் மொத்தம் 22 பெட்டிகள் உள்ளன என்று அந்த ரயில்வே அதிகாரி கூறினார். இதில் 6 மூன்றாம் வகுப்பு ஏசி, 2 இரண்டாம் வகுப்பு ஏசி, 1 முதல் வகுப்பு ஏசி, 6 ஸ்லீப்பர் வகுப்பு, 4 பொதுப் பெட்டிகள், 1 பேண்ட்ரி கார் (உணவகப் பெட்டி), 1 பவர் கார் மற்றும் 1 மாற்றுத்திறனாளிகளுக்கான காார்டு பிரேக் வேன் ஆகியவை அடங்கும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும். அம்ரித் பாரத் 1.0 மற்றும் அம்ரித் பாரத் 2.0 ரயில்களின் அனுபவத்தின் அடிப்படையில் இந்த அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் 3.0 வடிவமைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட அம்ரித் பாரத் ரயில்கள், குறைந்த வருமானம் மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு மலிவு விலையிலான சேவை மற்றும் உயர்தரப் பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ரயில்வேயின் கூற்றுப்படி, அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் 3.0 பெட்டிகள் புதிய உட்புற வண்ணக் கருப்பொருள்களைக் கொண்டுள்ளன. பிவிசி தரைத்தளம், இருக்கை மற்றும் படுக்கை ரெக்சின், சிற்றுண்டி மேஜைகள், திரைகள் மற்றும் கழிப்பறைப் பகுதிகள் போன்ற கூறுகளுக்கு இணக்கமான வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ரயிலில் பயன்படுத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களும் HL3 தீ பாதுகாப்பு தரநிலைகளுக்கு இணங்குவதாக ரயில்வே அமைச்சகம் முன்னதாகத் தெரிவித்திருந்தது. இது மேம்பட்ட காட்சி அழகியலுடன் பயணிகளுக்கு அதிக அளவிலான பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. இந்த புதிய வண்ணத் திட்டம் பெட்டிகளுக்கு நவீன மற்றும் சீரான தோற்றத்தைக் கொடுப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது நீடித்து உழைக்கும் தன்மையிலும், எளிதாகப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ICF) இருந்து, அம்ரித் பாரத் 3.0 ரயிலின் முதல் தயாரிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரயிலில் ஏசி மற்றும் ஏசி அல்லாத வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்திய ரயில்வேயில் ஏசி அல்லாத பெட்டிகளுடன் கூடிய சுமார் 60 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த புதிய ரயில் ஐசிஎஃப்-லிருந்து அனுப்பப்பட்டதை மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.