சிவகங்கை மழலையர் பள்ளிகளுக்கு உயர்நீதிமன்றம் நிவாரணம்: மூடல் உத்தரவுக்கு இடைக்கால தடை!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

காரைக்குடியைச் சேர்ந்த ரூபாஸ்ரீ, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியின் சுற்றறிக்கின் அடிப்படையில் மழலையர் பள்ளிகளை மூட இடைக்கால தடை. காரைக்குடியில் மழலையர் பள்ளி நடத்தி வருகிறேன். இப்பள்ளிக்கு அங்கீகாரம் வழங்கக்கோரி கட்டட உறுதித்தன்மை சான்றிதழ், தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ், சுகாதாரத்துறை சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட கல்வி அலுவலருக்கு (தனியார் பள்ளிகள்) கடந்தாண்டு விண்ணப்பித்தேன். இருப்பினும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் காரைக்குடியில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வருவதாக கூறி 16 மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மூடப்பட வேண்டிய பள்ளிகள் பட்டியலில் எங்கள் பள்ளி உள்பட 16 பள்ளிகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது சட்டவிரோதம். அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளேன். என் விண்ணப்பத்தை பரிசீலிக்காமலேயே மூடப்பட வேண்டிய பள்ளிகள் பட்டியலில் எங்கள் பள்ளியின் பெயரை சேர்க்கப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். விளக்கம் கேட்காமல் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது. எனவே, மழலையர் பள்ளிகளை மூடும் உத்தரவை ரத்து செய்தும், அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டுமென மனுவில் கூறியிருந்தார். இதே கோரிக்கை தொடர்பாக மேலும் 6 மழலையர் பள்ளி நிர்வாகம் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை நீதிபதி எல்.விக்டோரியாகெளரி விசாரித்தார். விசாரித்த நீதிபதி சிவகங்கை மாவட்டத்தில் மழலையர் பள்ளிகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையராக பிரகாசினி நியமிக்கப்படுகிறார். அவர் மழலையர் பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

எத்தனை பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது?

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளில் மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டு எத்தனை பள்ளிகள் அங்கீகாரம் பெற்றுள்ளது? எத்தனை பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகிறது? என்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்ட கல்வி அதிகாரியின் சுற்றறிக்கின் அடிப்படையில் மழலையர் பள்ளிகளை மூட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. காரைக்குடியைச் சேர்ந்த ரூபாஸ்ரீ தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கீகாரம் பெறுவதற்கான கட்டிட உறுதித்தன்மை மற்றும் தீயணைப்புத் துறை சான்றிதழ் தொடர்பான நடைமுறைகள் இந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளன.