PulseNews
தமிழகம்

நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்வு...

நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகே கோஷி ஆற்றில் ஏற்பட்ட மாபெரும் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற 133 பேர் உள்பட 750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரையும் பாதுகாப்பாக அழைத்துவர அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நேபாள மலைப்பகுதியில் 5.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அதனால், பனிப்பாறைகள் சரிந்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. சேறும் சகதியுமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பல நகரங்கள், கிராமங்கள் புதைந்துபோயின. பல சாலைகள், பாலங்கள், வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. பத்துக்கும் மேற்பட்ட நீர்மின் திட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல தங்குமிடங்கள் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. ரசுவா மற்றும் தாடிங் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Polimer News14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
நேபாளத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்வு...
PulseNews சுருக்கம்

நேபாளத்தில் திபெத் எல்லைக்கு அருகில் உள்ள கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது. நேபாள மலைப்பகுதியில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், பனிப்பாறைகள் சரிந்து இந்த வெள்ளப்பெருக்கு உருவானதாகக் கூறப்படுகிறது.

இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 750-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர், இவர்களில் இந்தியாவில் இருந்து ஆன்மிகச் சுற்றுலா சென்ற 133 பேரும் அடங்குவர். காணாமல் போனவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேரையும் பத்திரமாக மீட்டு அழைத்து வர வேண்டும் என்று அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலம்: Polimer NewsPolimer News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu