PulseNews
தமிழகம்

“ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேரை காணவில்லை” - ஜக்கி வாசுதேவ் வேதனை!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் உள்ள திபெத் எல்லைப் பகுதியில் நேற்று திடீரென பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கால் ஆற்றங்கரையோரத்திலிருந்த பல்வேறு கட்டிடங்கள், வாகனங்கள், ஆற்றின் குறுக்கே இருந்த பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன. மேலும் தற்போது வரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் 1000க்கு மேற்பட்டோர் காணாமல் போய்விட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் நேபாளத்தில் சிக்கி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நேபாளத்திற்கு யாத்திரைச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவென்று தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணியில் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கி வருகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலையையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஈஷா மூலம் சென்ற 80 பேரை காணவில்லை என ஈஷா யோகா மைய நிறுவனரான ஜக்கி வாசுதேவ் வேதனை தெரிவித்துள்ளார். திபெத்தின் சாகா பகுதியில் இருந்து இது குறித்து ஜக்கி வாசுதேவ் கூறியதாவது, “ திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஒரு பயங்கரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தியச் செய்தி அறிக்கைகளின்படி, நேபாளப் பகுதியில் சுமார் 484 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் இப்பகுதியில் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் எங்களிடம் இல்லை. ஈஷா மூலம் சென்ற 80 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அனைத்துத் தொலைபேசிகளும் அணைக்கப்பட்டுள்ளன, தொலைத்தொடர்பு வசதிகள் முடங்கியுள்ளன, சாலைகள் அடைக்கப்பட்டுள்ளன, அதனால் எங்களால் அங்கு செல்ல முடியவில்லை. அமெரிக்காவிலிருந்து 22 பேர், கனடாவிலிருந்து 12 பேர், ஆஸ்திரேலியாவிலிருந்து 11 பேர், லண்டனில் இருந்து 9 பேர், ஜெர்மனியிலிருந்து 4 பேர், பிரான்ஸ், நேபாளம் ஆகியவற்றிலிருந்து தலா 3 பேர், நெதர்லாந்து, நியூசிலாந்து, சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகியவற்றிலிருந்து தலா 2 பேர் என இந்த குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் பின்லாந்து, ஹங்கேரி, இஸ்ரேல், லிதுவேனியா, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தலா ஒருவர் வீதம் பங்கேற்றனர்; இதன் மூலம் மொத்த பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 80-ஆக இருந்தது. அவர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. எங்களிடம் எந்தவிதமான அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலும் இல்லை. அனைத்துத் தகவல் தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், எங்களால் எந்தத் தகவலையும் அறிய முடியவில்லை. எனவே எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்; இன்னும் முடியுமா என்று தேடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் இந்தியாவில் உள்ள இந்தியத் தூதரகம் மற்றும் சீனத் தூதரகம் மூலம் அனுமதி கோரி வருகிறோம். எங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் பணியில் நானும் தன்னார்வலர்கள் அடங்கிய ஒரு சிறிய குழுவும் கியிரோங் பகுதிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Nakkheeran14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
“ஈஷா மூலம் நேபாளம் சென்ற 80 பேரை காணவில்லை” - ஜக்கி வாசுதேவ் வேதனை!
PulseNews சுருக்கம்

நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் கட்டிடங்கள், வாகனங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த இயற்கை பேரிடரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 1000-க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாளத்திற்குச் சுற்றுலா சென்ற இந்தியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு சிக்கியுள்ளனர். இதில் ஈஷா மையம் மூலம் சென்ற 80 பேரைக் காணவில்லை என்ற செய்தியால் ஜக்கி வாசுதேவ் மிகுந்த வேதனை அடைந்துள்ளார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu