Toxic: ராக்கி பாய் வராரு.. 12 ஆயிரம் தியேட்டர்களில் நாளை ரிலீசாகிறது டாக்ஸிக்!

கன்னட திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் யஷ். கேஜிஎஃப் படத்திற்கு பிறகு இவரது புகழ் இந்தியா முழுவதும் பரவியது. கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களுக்கு பிறகு கடந்த 4 ஆண்டுகளாக எந்த படமும் யஷ்-க்கு வெளியாகாமல் இருந்து வருகிறது.

டாக்ஸிக் நாளை ரிலீஸ்:

இந்த நிலையில், அவரது அடுத்த படமான டாக்ஸிக் நாளை வெளியாகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படம் கன்னடம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. யஷ்க்கு கேஜிஎஃப் படத்திற்கு பிறகு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் வட இந்தியாவில் உருவாகியிருப்பதால் இந்த படம் பாலிவுட்டிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

நடிகையும், இயக்குனருமான கீது மோகன்தாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் யஷ்க்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். அவருடன் இணைந்து நயன்தாரா. ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

கதை என்ன?

இந்த படத்தின் டீசர், ட்ரெயிலர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. இந்த படத்தில் யஷ் தந்தை மற்றும் மகன் ஆகிய இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். கேங்ஸ்டர் தந்தை மற்றும் கேங்ஸ்டர் மகன் இடையே நடக்கும் ஈகோ மோதலே இந்த படத்தின் மையக்கதை ஆகும்.

பிரம்மாண்ட பட்ஜெட்:

இந்த படத்தின் கதைக்களம் வெளிநாட்டில் நடப்பது போல உருவாக்கப்பட்டிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் ரூபாய் 500 கோடி முதல் ரூபாய் 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் என்று கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். டாக்ஸிக் படத்திற்கு உஜ்வால் குல்கர்னி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படம் உலகெங்கும் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஓணம் கொண்டாட்டமாக நாளை இந்த படம் வெளியாக இருப்பதால் இந்த படம் ஓணம் விடுமுறையால் கேரளாவில் நல்ல வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசூலை குவிக்குமா?

புதன், வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 5 நாட்களில் வசூல் குவியும் என்று படக்குழு எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் படத்திற்கு பிறகு வெளியாகும் இந்த படம் வசூலை குவித்தால் யஷ் மீண்டும் பாலிவுட் நடிகர்களுக்கு சவால் விடும் ஒரு தென்னிந்திய நடிகராக உருவெடுப்பார்.

கேஜிஎஃப் திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளாக நடிகர் யஷ் நடிப்பில் எந்தப் படமும் வெளியாகவில்லை. கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்ஸிக்' திரைப்படம், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தத் திரைப்படம் கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மொத்தம் 12 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் ரிலீசாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.