PulseNews
தமிழகம்

Mayiladuthurai Power Shutdown (29.08.2026) : நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த 11 ஊர்களில் மின்சாரம் இருக்காது - மின்வாரியம் அறிவிப்பு!

சீர்காழி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் (TANGEDCO) சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ள 110/11 கிலோ வோல்ட் (கி.வோ.) துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக, நாளை (29-08-2026, சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருவெண்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய கிராமங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று சீர்காழி தெற்கு (இயக்கலும் பராமரித்தலும்) உதவி செயற்பொறியாளர் பொறி. க.அனுராதா தனது அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

பராமரிப்பு பணிகளின் முக்கியத்துவம் மற்றும் விவரங்கள்

பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி தொடர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், சீரான அழுத்தத்துடனும் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய துணைமின் நிலையங்களில் மாதம் ஒருமுறை மின் சாதனங்களை ஆய்வு செய்து பராமரிப்பது வழக்கமாகும்.

அந்த வகையில், திருவெண்காடு 110/11 கி.வோ. துணைமின் நிலையத்தில் உள்ள உயர்மின்னழுத்த மின்மாற்றிகள் (Transformers), கட்டுப்பாட்டு பேனல்கள் (Control Panels), மின்னல் தாங்கிகள் (Lightning Arresters), மற்றும் மின்பாதைகளில் படர்ந்துள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நாளை மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும், மின்கம்பங்கள் மற்றும் மின்சாரக் கம்பிகளின் பலத்தை ஆய்வு செய்து சீரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடத்தப்படவுள்ளன. இந்த முக்கிய தொழில்நுட்பக் காரணங்களால் பாதுகாப்பு கருதி மின் விநியோகம் முழுமையாக நிறுத்தப்படுகிறது.

மின்சாரம் நிறுத்தப்படும் பகுதிகள்

திருவெண்காடு துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் கீழ்க்கண்ட 11 முக்கிய பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்கள், விவசாயப் பகுதிகள், வணிக வளாகங்களில் மின் விநியோகம் முழுமையாகத் தடைபடும்:

* திருவெண்காடு (நகரப் பகுதி மற்றும் கோவில் வளாகப் பகுதிகள்)

* மேலையூர்

* மணிக்கிராமம்

* பூம்புகார் (சுற்றுலாத் தளம் மற்றும் கடலோரக் கிராமங்கள்)

* பெருந்தோட்டம்

* நாங்கூர்

* திருநகரி

* திருவாலி

* மேலசாலை

* மங்கைமடம்

* அண்ணன்பெருமாள்கோவில்

மேற்கண்ட ஊர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு இந்த மின்தடை பொருந்தும்.

பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்

மின்சார வாரிய அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்குப் பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

குடிநீர் சேமிப்பு: மின் விநியோகம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடைபடும் என்பதால், குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் தேவையான நீரை இன்ற இரவுக்குள்ளேயே அல்லது நாளை காலை 9 மணிக்கு முன்பாகச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மின் சாதனங்கள் பாதுகாப்பு: மின்தடை காலத்தில் திடீர் மின்னழுத்த மாறுதல்கள் (Voltage Fluctuations) ஏற்படுவதைத் தவிர்க்க, வீடுகள் மற்றும் அலுவலகங்களில் உள்ள கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள் (AC), தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் துணி துவைக்கும் இயந்திரங்கள் போன்ற உணர்திறன் மிக்க மின் சாதனங்களின் சாக்கெட்டுகளை சுவிட்ச் ஆஃப் செய்து வைப்பது நல்லது.

மின்சார வாகனங்கள் (EV): மின்சார வாகனங்கள் வைத்திருப்போர் தங்களது வாகனங்களை இன்ற இரவே முழுமையாக சார்ஜ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்கள்: கணினி சார்ந்த பணிகள், மாவு மில்கள், வெல்டிங் பட்டறைகள் மற்றும் சிறுகுறு தொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாடப் பணிகளை இந்த மின்தடை நேரத்திற்கு ஏற்ப திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

முக்கிய குறிப்பு

அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள், மின்கட்டமைப்பில் ஏற்படும் எதிர்பாராத தொழில்நுட்ப சவால்கள் அல்லது தட்பவெப்ப நிலை மாற்றங்களைப் பொறுத்து (மழை அல்லது புயல் போன்ற காரணங்கள்) கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

பராமரிப்புப் பணிகள் மாலை 5 மணிக்கு முன்னதாக நிறைவடையும் பட்சத்தில், அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மின் கம்பிகள் அல்லது மின் மாற்றிகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும், அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

மின்சாரம் தொடர்பான கூடுதல் தகவல்கள், அவசர புகார்கள் அல்லது சந்தேகங்களுக்கு பொதுமக்கள் சீர்காழி தெற்கு பிரிவு மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது உள்ளூர் மின் வாரிய ஊழியர்களையோ தொடர்புகொள்ளலாம்.

சீராகவும் தடையில்லாமலும் மின்சாரம் வழங்க ஏதுவாக மேற்கொள்ளப்படும் இந்த மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்குத் திருவெண்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மின்வாரியத் துறை சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Abp News13 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Mayiladuthurai Power Shutdown (29.08.2026) : நாளை மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த 11 ஊர்களில் மின்சாரம் இருக்காது - மின்வாரியம் அறிவிப்பு!
PulseNews சுருக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கோட்டத்திற்கு உட்பட்ட திருவெண்காடு துணைமின் நிலையத்தில் நாளை (29-08-2026, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதன் காரணமாக, காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருவெண்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 11 கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மூலம்: Abp NewsAbp News-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu