மழை வர வேண்டுதல்; முதலைக்கு சிறப்பு பூஜை
தெலுங்கானா மாநிலம், ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில் உள்ள பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில் கிருஷ்ணா ஆறு ஓடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, அந்த ஆற்றில் இருந்து ஒரு முதலை வெளியே வந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அஞ்சி நடுங்கினர். அந்த சமயத்தில் அங்குள்ள ஆஞ்சநேயர் கோயில் பூசாரி அனில் சர்மா என்பவர் அதன் அருகில் சென்றார். பின்பு, அந்த முதலைக்கு முன்பாக அமர்ந்து, அதன் மீது பூக்கள், மஞ்சள் மற்றும் குங்குமம் தூவி அனில் சர்மா சிறப்புப் பூஜை செய்தார். இதனிடையே, அந்த முதலையும் அந்த பூசாரியை எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்தது. இதனை அப்பகுதியில் இருந்த மக்கள் அனைவரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இந்நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் அந்த முதலையை மீட்டு மீண்டும் ஆற்றுக்குள் விட்டனர். இந்த ஆண்டு சரியான அளவில் பருவ மழை பெய்யாததால், மழை வர வேண்டி இந்த பூஜை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காலங்காலமாக மழை வரவேண்டி விலங்குகளுக்குத் திருமணம் செய்து வைப்பது வழக்கமான நிகழ்ச்சியாக இருந்தாலும், இது அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெலியாகி வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கத்வால் மாவட்டம், பீச்சுப்பள்ளி புஷ்கர காட் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆற்றில் இருந்து சில நாட்களுக்கு முன்பு ஒரு முதலை வெளியேறியது. இதைக் கண்டு அப்பகுதி மக்கள் அச்சமடைந்த நிலையில், அங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் பூசாரி அனில் சர்மா அந்த முதலையின் அருகில் சென்றார்.
அவர் அந்த முதலைக்கு முன்னால் அமர்ந்து, அதன் மீது மஞ்சள், குங்குமம் மற்றும் பூக்களைத் தூவி சிறப்பு பூஜை செய்தார். இந்தச் சமயத்தில் அந்த முதலையும் பூசாரியைத் தாக்காமல் அமைதியாக இருந்தது. மழையை வேண்டி இந்த வழிபாடு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.