“நடுக்கடலில் பயங்கரம்!”.. சவுதியில் ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு.. தமிழக மீனவர் பரிதாப பலி!!
Tamil Nadu Fisherman Shot Dead: சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ஈரான் கடற்கொள்ளையர்கள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். காயமடைந்த மற்றொரு மீனவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் உடலை தாயகம் கொண்டுவர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சவுதி அரேபிய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது ஈரான் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த மாவீரன் என்ற மீனவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மற்றொரு மீனவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த மாவீரனின் உடலை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.