PulseNews
தமிழகம்

Chennai News LIVE Updates: காணாமல் போன 80 ஈஷா உறுப்பினர்களைத் தேட அனுமதியுங்கள்: நேபால அரசுக்கு ஜக்கி வாசுதேவ் அவசர வேண்டுகோள்

Tamil Nadu News LIVE சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்களுக்குச் சுமை ஏதும் இன்றி இன்றும் இவைகளின் விலைகள் நிலையாக நீடிக்கின்றன. இதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனையாகிறது. அதேபோல, ஒரு கிலோ சிஎன்ஜி (CNG) விலை ரூ.97.00 ஆக மாறாமல் தொடர்கிறது. ஈரோடு அருகே கரும்பு காட்டுக்குள் புகுந்த யானைகள் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள உக்கரம் பொய் ஏரிக்கரை பகுதியில் அடர்ந்த கரும்பு காட்டுக்குள் திடீரென காட்டு யானைகள் புகுந்துள்ளன. யானைகள் ஊருக்குள் புகுந்துள்ளதைத் தொடர்ந்து, வனத்துறை மற்றும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்குமாறும் அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். Video: Sun News #Watch | ஈரோடு: கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள உக்கரம் பொய் ஏரிக்கரை பகுதியில் கரும்பு காட்டுக்குள் புகுந்த யானைகள் ஊருக்குள் யானைகள் புகுந்ததை அடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது #SunNews | #Elephant | #Erode pic.twitter.com/uDzwu4yiEr — Sun News (@sunnewstamil) August 27, 2026

The Indian Express14 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
Chennai News LIVE Updates: காணாமல் போன 80 ஈஷா உறுப்பினர்களைத் தேட அனுமதியுங்கள்: நேபால அரசுக்கு ஜக்கி வாசுதேவ் அவசர வேண்டுகோள்
PulseNews சுருக்கம்

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி (CNG) ஆகியவற்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் எவ்வித சுமையுமின்றி நேற்றைய விலையிலேயே எரிபொருட்களைப் பெற்று வருகின்றனர்.

இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் 107.77 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 99.55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிலோ சிஎன்ஜி விலையும் மாற்றமின்றி 97.00 ரூபாயாகவே நீடிக்கிறது.

மூலம்: The Indian ExpressThe Indian Express-இல் முழு செய்தியைப் படிக்க →
#tamilnadu