சென்னை மக்களே! 40 நாட்கள் இதை சரியாக செய்தால் பரிசு... மாநகராட்சியின் புதிய திட்டம்!

சென்னை மாநகராட்சியில் குப்பையை மக்கும் மற்றும் மக்காத குப்பை எனத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை பொதுமக்களிடம் மேலும் அதிகரிக்கும் நோக்கில், ‘குப்பையைப் பிரிப்போம் – நாளையைக் காப்போம்’ என்ற பெயரில் 40 நாட்கள் நடைபெறும் சிறப்பு விழிப்புணர்வு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 5 மண்டலங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

வீடுகளுக்கு பிரத்யேக பைகள் விநியோகம்

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வீடுகளில் மக்காத குப்பையை தனியாக சேகரித்து வழங்குவதற்கு வசதியாக பொதுமக்களுக்கு பிரத்யேக பைகள் வழங்கப்பட்டுள்ளன. மதுரவாயல், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ.க்களான ரேவந்த் சரண், ஹரீஷ் மற்றும் சரவணமூர்த்தி ஆகியோர் பொதுமக்களுக்கு பைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.

மேலும், மக்கும் மற்றும் மக்காத குப்பையை முறையாகத் தரம் பிரித்து வழங்கி வரும் பொதுமக்கள், உணவகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மாநகராட்சி சார்பில் கவுரவிக்கப்பட்டது.

5 மண்டலங்களில் 5,000 பைகள்

முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 5 மண்டலங்களிலும் தலா 1,000 பிரத்யேக பைகள் வீதம் மொத்தம் 5,000 பைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பைகளில் மக்காத குப்பையை மட்டும் சேகரித்து, முறையாகத் தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குப்பையை வீடுகளிலேயே முறையாகப் பிரித்து வழங்குவதன் மூலம், குப்பை மேலாண்மை பணிகளை எளிதாக்குவதுடன், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை மீட்டெடுக்கவும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் முடியும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

40 நாட்கள் தொடர்ந்து கண்காணிப்பு

இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் பொதுமக்களின் செயல்பாடுகள் தொடர்ந்து 40 நாட்களுக்கு கண்காணிக்கப்பட உள்ளன. பிரத்யேகமாக நியமிக்கப்பட்டுள்ள ‘உர்பேசர் சுமித்’ நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள் மக்காத குப்பையை முறையாகச் சேகரித்து வழங்குகிறார்களா என்பதையும், குப்பை தரம் பிரிப்பு நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படுகிறதா என்பதையும் மதிப்பீடு செய்ய உள்ளனர்.

இதன் மூலம், ஒருசில நாட்களுக்கு மட்டும் குப்பை தரம் பிரிப்பதை விட, பொதுமக்களின் அன்றாட பழக்கமாகவே குப்பை தரம் பிரிப்பை மாற்றுவதே இந்த 40 நாள் விழிப்புணர்வு திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

முறையாக ஒத்துழைப்போருக்கு பாராட்டு மற்றும் பரிசு

திட்டம் தொடங்கிய நாளில் இருந்து 40 நாட்களும் தொடர்ந்து குப்பையை முறையாகத் தரம் பிரித்து வழங்கி, மாநகராட்சிக்கு முழுமையாக ஒத்துழைக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பை தரம் பிரிப்பில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், சென்னையை தூய்மையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நகரமாக மாற்றும் முயற்சிக்கு இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிற மண்டலங்களுக்கும் விரிவாக்கம்

முதற்கட்டமாக 5 மண்டலங்களில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்கு பொதுமக்களிடையே கிடைக்கும் வரவேற்பு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில், சென்னை மாநகராட்சியின் பிற மண்டலங்களுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குப்பையை தரம் பிரித்து வழங்குவது ஒவ்வொரு வீட்டிலும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான பழக்கமாக மாற வேண்டும் என்பதே மாநகராட்சியின் நோக்கமாக உள்ளது.

சென்னை மாநகராட்சியில் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாகத் தரம் பிரித்து வழங்கும் பழக்கத்தை ஊக்குவிக்க, 'குப்பையைப் பிரிப்போம் – நாளையைக் காப்போம்' என்ற பெயரில் 40 நாட்கள் கொண்ட விழிப்புணர்வுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் முதற்கட்டமாக அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய ஐந்து மண்டலங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே குப்பை மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.