PulseNews
விளையாட்டு

முதல்வர் குறித்துப் பேசிய எ.வ. வேலு : திடீரென குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று (18.08.2026) நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், “முதலமைச்சர் விஜய் அன்றைக்கு தன்னுடைய பதிலில் பேசுகிறபொழுது நாங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டுதான் இருந்தோம். முதல் முறையாக முதலமைச்சர் வந்திருக்கிறார். உரையை நாம் முழுமையாகக் கேட்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நாங்கள் உரையைக் கேட்டுக்கொண்டிருந்தோம். திடீரென்று பேசிய முதலமைச்சர் என்ன சொன்னார் என்று சொன்னால், நான் பேசிய முழு பேச்சையும் வைத்திருக்கிறேன். இருந்தாலும் அதைச் சுருக்கமாகச் சொல்கிறேன். அன்றைக்கு முதலமைச்சர் அளித்த பதிலுரையில், ‘டெண்டர்களை முறைப்படுத்தத் தெரிந்த அளவுக்கு, அதனுடைய டெண்டர் ரேட்டை உயர்த்தி ஊழல் செய்யத் தெரியாது’ என்ற வார்த்தையைச் சொன்னார். ‘ஊழல்’ என்பது தயவுசெய்து நீங்களே எடுத்துவிடுங்கள். அவர் சொன்ன வார்த்தையைத்தான் நான் கோட் பண்றேன். அதை நீங்களே எடுத்துடலாம். ‘எங்களுக்கு ரேட்டை ஏற்றி பண்ணத் தெரியாது. ஏன்னா, அந்த ரேட்டை ஏற்றுவது, போவது, வருவது எல்லாம் குறித்து யாரோ முதலமைச்ரை தவறாக வழிநடத்தியுள்ளனர்” எனத் தெரிவித்தார். அதற்கு அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டு, “முன்னாள் அமைச்சருக்கு நன்றாகத் தெரியும். ‘தவறாக எழுதி கொடுத்துவிட்டாரோ, தவறாகப் புரிந்துகொண்டாரோ’ என்ற வார்த்தைகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது. முதலமைச்சரை யாரும் வழிநடத்தத் தேவையில்லை. எல்லாம் தெரிந்தவர். விரல் நுனியில் விவரங்களையெல்லாம் வைத்துக்கொண்டுதான் பேசுகிறார். எ.வ. வேலு தொடர்ந்து பேசலாம்” எனத் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து எ.வ. வேலு பேசுகையில், “இது சட்டமன்றத்தில் ஒரு பதிவாக இருக்கிற காரணத்தினால் இதைச் சொல்கிறேன். நான் என்ன சொல்கிறேன் என்றால், முதலமைச்சருக்கு அதிகமான திறமை என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், என்னுடைய வயதுக்கு நான் இந்த சட்டமன்றத்திற்கு 1984இல் வந்தேன் என்பது உங்களுக்கெல்லாம் தெரியும். நான் எந்தத் தவறான வார்த்தைகளையோ, அன்பார்லிமெண்ட் வார்த்தைகளையோ பயன்படுத்த மாட்டேன். பயன்படுத்தவும் தெரியாது. ஏனென்றால், அப்படித்தான் எங்களையெல்லாம் வளர்த்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, கலைஞர் காலத்திலும் சரி, என்னுடைய தலைவர் மு.க. ஸ்டாலின் காலத்திலும் அப்படித்தான் எங்களை வளர்த்திருக்கிறார். மாற்றுக்கருத்து இருக்கலாம். ஆனால் ஷெட்யூல் ஆஃப் ரேட் என்பது எப்படி தயாரிக்கப்படுகிறது? நாளைக்கு அமைச்சராக இருப்பவர்கள், நீங்கள் பிற்காலத்தில் ஒரு கேள்வி கேட்கும்போது, நீங்களே அப்படித்தான் பதில் சொல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. இந்தப் புத்தகத்தை நான் ஒன்றும் தயார் பண்ண முடியாது. ஷெட்யூல் ஆஃப் ரேட் நான் பண்ண முடியாது. இது காலங்காலமாக, 1947 இல் சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இருப்பது. அரசினுடைய கைடு மாதிரி. எல்லா துறைக்கும் கைடாக இது இருக்கிறது. எல்லாம் சொல்லிவிட்டேன். தவறான எதையும் நான் சொல்லவில்லை என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

Nakkheeran15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
முதல்வர் குறித்துப் பேசிய எ.வ. வேலு : திடீரென குறுக்கிட்ட அமைச்சர் செங்கோட்டையன்!
PulseNews சுருக்கம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.08.2026) நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின்போது, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசத் தொடங்கினார்.

முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை குறித்து எ.வ. வேலு கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருந்தபோது, அவை நடவடிக்கையில் அமைச்சர் செங்கோட்டையன் குறுக்கிட்டார். முதலமைச்சரின் உரையை முழுமையாகக் கவனிக்க வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் இருந்ததாக எ.வ. வேலு தனது உரையின்போது குறிப்பிட்டிருந்தார்.

மூலம்: NakkheeranNakkheeran-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports