சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வெர்பியர் பைக் திருவிழா..!
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வெர்பியர் ((Verbier )) பைக் திருவிழாவின் eMTB சேலஞ்ச் புரோ மிதிவண்டி பந்தயத்தில் போர்ச்சுகலின் இமானுவேல் பொம்போ ((Emanuel Pombo ))ஆண்கள் பிரிவிலும், ஆஸ்திரியாவின் அன்னா ஸ்பீல்மேன் ((Anna Spielmann)) பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்றனர். 35 கிலோமீட்டர் தூரமும் 970 மீட்டர் ஏற்றமும் கொண்ட இந்த கடினமான பாதையை முன்கூட்டியே பார்வையிட அனுமதியின்றி, குறிப்பிட்ட நேரத்தில் கடக்கும் முறையில் இப்போட்டி நடத்தப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற வெர்பியர் பைக் திருவிழாவின் அங்கமாக, இ-எம்டிபி (eMTB) சேலஞ்ச் புரோ மிதிவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் போர்ச்சுகலைச் சேர்ந்த இமானுவேல் பொம்போவும், பெண்கள் பிரிவில் ஆஸ்திரியாவின் அன்னா ஸ்பீல்மேனும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த மிதிவண்டிப் பந்தயப் பாதை 35 கிலோமீட்டர் தூரத்தையும், 970 மீட்டர் ஏற்றத்தையும் கொண்டிருந்தது. போட்டியாளர்கள் இந்தப் பாதையை முன்கூட்டியே பார்வையிட அனுமதி வழங்கப்படாமல், குறிப்பிட்ட நேரத்திற்குள் கடக்கும் சவாலான முறையில் இப்பந்தயம் நடத்தப்பட்டது.