சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக விரும்புவதாக சுரேஷ் ரெய்னா விருப்பம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த நேர்காணல் மற்ற…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் தனக்கு விருப்பம் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த நேர்காணல் மற்றும் கருத்துக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்று வைரலாகி வருகின்றன.
அணியின் நீண்டகால பயிற்சியாளராகப் பணியாற்றிய ஸ்டீபன் பிளமிங் அண்மையில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணிகளில் சிஎஸ்கே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்தச் சூழலில், தனக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டால் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ரெய்னா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சென்னை ரசிகர்களால் 'சின்ன தல' என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, இது தொடர்பாக அணி நிர்வாகத்திடமும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளார். ரெய்னாவின் இந்த அறிவிப்பு மற்றும் பயிற்சியாளர் பணி குறித்த அவரது விருப்பம், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.