மேற்கிந்தியத் தீவுகள் தொடர்: ரஜத் பட்டிதார் புறக்கணிப்பால் ரசிகர்கள் ஏமாற்றம்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆர்சிபி அணியின் வீரர் ரஜத் பட்டிதார் மீண்டும் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் ஆர்சிபி அணியின் வீரர் ரஜத் பட்டிதார் மீண்டும் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானதும் அவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
அதேவேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் இந்தத் தேர்வை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். ரஜத் பட்டிதார் அணியில் சேர்க்கப்படாததை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.