தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாகத் தொடங்கிய முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை மாநில…

தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டுக்கான போட்டிகள் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 4-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதிலும் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவில் நடைபெறவுள்ளன.
கோயம்புத்தூர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் தனியார் கல்லூரியில் நடைபெற்ற தொடக்க விழாவில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் சம்பத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனிடையே, போட்டியில் பங்கேற்று சிலம்பம் விளையாடிக்கொண்டிருந்தபோது நாடாளுமன்ற உறுப்பினர் சுதா கால் இடறி கீழே விழுந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி. மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் சுமார் 1,700 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். முன்னதாக, விழாவில் உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார், விளையாட்டுத் துறையில் பதக்கங்கள் வெல்வதில் நாம் தற்போது எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். மேலும், அமைச்சர்களும் மாவட்ட ஆட்சியரும் மாணவர்களுடன் இணைந்து வாலிபால் விளையாடி மகிழ்ந்தனர்.