PulseNews
விளையாட்டு

புதிய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 440 அறிமுகம்: விலையில் அதிரடி குறைப்பு

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய 'ஹிமாலயன் 440' மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. லடாக் பிராந்தியத்தில் நடைபெற்ற ஹிமாலயன் பேஸ் கேம்ப் நிகழ்வில் இந்த புதிய…

PulseNews ஆசிரியர் குழு2 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
புதிய ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 440 அறிமுகம்: விலையில் அதிரடி குறைப்பு

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது புதிய 'ஹிமாலயன் 440' மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. லடாக் பிராந்தியத்தில் நடைபெற்ற ஹிமாலயன் பேஸ் கேம்ப் நிகழ்வில் இந்த புதிய மாடல் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

சாகச பயணங்களை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், ஏற்கனவே உள்ள ஹிமாலயன் 450 மாடலின் மினி வெர்ஷனாக சந்தையில் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பைக் குறித்த விலை மற்றும் இதர தொழில்நுட்ப தகவல்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஹிமாலயன் 450 மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய ஹிமாலயன் 440 சுமார் 79,000 ரூபாய் குறைவான விலையில் கிடைக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை 2.29 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

#sports#editorial