மகளிர் ஆசிய கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதல்
துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த முக்கியமான ஆட்டத்தில் வெ…

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த முக்கியமான ஆட்டத்தில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் இதுவரை 17 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கடைசியாக 2022 அக்டோபர் மாதம் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா எப்போதும் ஒரு படி மேலான நிலையில் இருப்பதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா குறிப்பிட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.