PulseNews
விளையாட்டு

ஆள விடுங்கடா.. திடீர் ட்விஸ்ட்...! இபிஎஸ் பக்கம் பல்டி அடித்த தங்கமணி! பின்னணியில் இருக்கும் டெல்லி மாஸ்டர் பிளான்... திக்குமுக்காடும் எஸ்.பி.வேலுமணி...!!!

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில், அவர்களுடன் இருந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 14-ம் தேதி சேலத்தில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் அவர் பங்கேற்று பழனிசாமியை புகழ்ந்து பேசியது கட்சிக்குள் கவனம் பெற்றுள்ளது. எடப்பாடிக்கு எதிரான அணியில் ஏற்பட்ட சலசலப்பு மாவட்டச் செயலாளர் பதவிகளை மீண்டும் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வேலுமணியும், சண்முகமும் எடப்பாடி பழனிசாமியுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்றத்திலும் தனித்துப் செயல்பட்டு வந்த இவர்களிடம், அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைக்கான தெளிவான திட்டம் இல்லை என்ற அதிருப்தி ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதையும் படிங்க: அடுத்தடுத்து அதிமுகவில் நடக்கும் அதிர்ச்சி.... ஒரே கடிதத்தால் மொத்தமாக மாறிய அரசியல் கணக்கு! செம ஷாக்கில் எடப்பாடி!!! இந்த சூழலில்தான் தங்கமணியின் அரசியல் நகர்வு அந்த அணிக்குள் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வேலுமணி தரப்பினர் ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என கூறப்பட்டிருந்த நிலையில், தங்கமணி மட்டும் சேலத்தில் நேரில் கலந்து கொண்டார். பழனிசாமியை புகழ்ந்து பேசிய தங்கமணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதோடு மட்டுமின்றி, எடப்பாடி பழனிசாமியை பாராட்டியும் தங்கமணி பேசியுள்ளார். இதனால், எஸ்.பி.வேலுமணி அணி தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக நிலவி வந்த உட்கட்சி கருத்து வேறுபாட்டில் தங்கமணியின் நிலைப்பாடு மாற்றம் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. டெல்லி அரசியல் தொடர்புகளும் காரணமா? தங்கமணியின் இந்த மாற்றத்துக்கு பின்னால் பாஜக மேலிடத்துடனான தொடர்புகளும் இருப்பதாக விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். முன்னாள் மின்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்தே மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் தங்கமணிக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழலில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே சாதகமாக இருப்பதை தங்கமணி உணர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, தெளிவான அரசியல் திட்டமின்றி தனி அணியாக தொடர்வதைவிட பழனிசாமி தரப்புடன் இணைந்து செயல்படுவது பாதுகாப்பானது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தங்கமணியின் இந்த நகர்வு, அதிமுக உட்கட்சி அரசியல் களத்தில் வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்புக்கு புதிய சவாலை உருவாக்கியுள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இதையும் படிங்க: ரூட்டை மாற்றின எடப்பாடி! ஒரே நாளில் 500 நிர்வாகிகளுக்குப் புதிய பதவி... அதிரும் அதிமுக அரசியல் களம்!!!

Tamil Spark15 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
ஆள விடுங்கடா.. திடீர் ட்விஸ்ட்...! இபிஎஸ் பக்கம் பல்டி அடித்த தங்கமணி! பின்னணியில் இருக்கும் டெல்லி மாஸ்டர் பிளான்... திக்குமுக்காடும் எஸ்.பி.வேலுமணி...!!!
PulseNews சுருக்கம்

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் குரல் கொடுத்து வரும் சூழலில், முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார். சேலத்தில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர், எடப்பாடி பழனிசாமியைப் புகழ்ந்து பேசியது அக்கட்சியினரிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

தங்கமணியின் இந்த திடீர் மாற்றம், எடப்பாடிக்கு எதிரான அணியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தங்கமுனை, வேலுமணி உள்ளிட்டோர் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த அரசியல் நகர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மூலம்: Tamil SparkTamil Spark-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports