IND vs AFG: இந்திய அணியின் புதிய டி20 தொடர்.. தேதியை அறிவித்த ஆப்கானிஸ்தான்.. எப்போது தெரியுமா?
India vs Afganistan T20 Series: இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான டி20 தொடரின் 3 போட்டிகளும் 2026 செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) இந்தத் தேதிகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்தத் தொடரில் மொத்தம் 3 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த மூன்று போட்டிகளும் 2026-ம் ஆண்டு செப்டம்பர் 13, 15 மற்றும் 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும். இந்தத் தேதிகளுக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (BCCI) தனது ஒப்புதலை அளித்துள்ளது.