TNPL: 182 ரன்கள் இலக்கு... 137-க்கே சுருண்ட நெல்லை..! திருச்சிக்கு அபார வெற்றி..!
TNPL-ன் 12-வது லீக் போட்டியில் திருச்சி கிராண்ட் சோலாஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நெல்லை ராயல் கிங்ஸை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராஜ்குமாரின் அதிரடி பேட்டிங்கைத் தொடர்ந்து பந்துவீச்சிலும் மிரட்டிய திருச்சி, நெல்லையை 137 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றியை பதிவு செய்தது.

டிஎன்பிஎல் தொடரின் 12-வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிராக திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. முதலில் விளையாடிய திருச்சி அணி 182 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
தொடர்ந்து களமிறங்கிய நெல்லை அணி, திருச்சி வீரர்களின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 137 ரன்களுக்குள் சுருண்டது. பேட்டிங்கில் ராஜ்குமார் அதிரடி காட்டிய நிலையில், பந்துவீச்சிலும் அசத்திய திருச்சி அணி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளது.