“தம்பட்டம்... தம்பட்டம்...” - எ.வ. வேலு மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே விவாதம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தொடர்பாக நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை தொடர்பான மானியக் கோரிக்கை இன்று (18.08.2026) நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், “பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பிறந்த மாவட்டம் எது என்று சொன்னால், அன்றைய வட ஆற்காடு மாவட்டம். இன்றைக்கு அது வேலூர் மாவட்டம். வட ஆற்காடு மாவட்டத்தில்தான் என் சொந்த ஊர் இருந்தது. அதற்குப் பின்னர் திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம் என நான்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “நான் பிறந்தது திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பி.எச்.ஈ.எல். என்பதைப் பதிவு செய்கிறேன். அவையில் தவறான ஒரு தகவலைக் கொடுக்கக்கூடாது. இன்னொன்று, ‘தம்பட்டம் அடிக்கிறார், தம்பட்டம் அடிக்கிறார்’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த வார்த்தை தேவையற்ற வார்த்தை. இன்னும் அறிவாலயத்தில் பெரியார் சிலை நிறுவப்படவில்லை. த.வெ.க கட்சி அலுவலகத்தில் பெரியார் சிலையும், அம்பேத்கர் சிலையும் இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து எ.வ. வேலு, “தம்பட்டம் என்பது அன்பார்லிமென்டரி வார்த்தை இல்லை. சுயபுராணம் என்று சில நேரங்களில் சொல்வோம்; தம்பட்டம் என்றும் சொல்வோம். விளம்பரப்படுத்திக்கொள்வது என்பதுதான் அதன் பொருள். வேறு ஒன்றுமில்லை. அவர் பிறந்த ஊர் தொடர்பாக எனக்குக் கிடைத்த தகவலை நான் சொன்னேன். ஒருவரைப் பெருமைப்படுத்துவதற்காக வட ஆற்காடு மாவட்டம் என்று கூறினேன். வட ஆற்காடு மாவட்டம் ஒரு பெரிய மாவட்டம். அந்த மாவட்டத்திலே கே.வி.குப்பம் தொகுதியில் தொண்டான் துளசி என்கிற அவருடைய தந்தை ராஜேந்திர ரெட்டியார் இருந்தார் என்று எனக்குக் கிடைத்த தகவலை வைத்துச் சொன்னேன். அது இல்லை என்று மறுத்தால், அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (18.08.2026) நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு மற்றும் மனிதவள மேலாண்மைத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது, அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா மற்றும் எ.வ. வேலு ஆகியோருக்கு இடையே காரசாரமான விவாதம் எழுந்தது.
முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு பேசுகையில், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பிறந்த மாவட்டமான அன்றைய வட ஆற்காடு மாவட்டம் மற்றும் தற்போதைய வேலூர் மாவட்டம் குறித்துக் குறிப்பிட்டார். தனது சொந்த ஊர் வட ஆற்காடு மாவட்டத்தில் இருந்ததையும், அதன்பின் திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களாகப் பிரிந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.