குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ரத்தா?: கேள்வியும் - விளக்கமும்
கடந்த தி.மு.க. ஆட்சியில் சென்னை செம்மஞ்சேரியில் கொண்டு வர திட்டமிடப்பட்ட குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டத்தை த.வெ.க. அரசு ரத்து செய்தது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்றும், அதனை மறு உருவாக்கம் செய்து புதிய வடிவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். புதிய திட்டம் குறித்த அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும் தெரிவித்தார்.

சென்னை செம்மஞ்சேரியில் முந்தைய தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட குளோபல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்டம் ரத்து செய்யப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இத்திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளார்.
தற்போது இத்திட்டத்தை மறுவடிவமைப்பு செய்து புதிய முறையில் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என்றும் அவர் தெரிவித்தார்.