‘ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்தை கைவிடுகிறீர்களா?.. பேரவையில் ஆதவ் அர்ஜுனா vs உதயநிதி ஸ்டாலின் அனல் பறந்த விவாதம்!!
Global Sports City Project: தமிழக சட்டப்பேரவையில் சர்வதேச ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பது குறித்து தவெக அரசிற்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சுவாரசியமான விவாதம் நடைபெற்றது. இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும், 46 விளையாட்டுகளுடன் உலகத் தரத்தில் சீரமைக்கப்பட்டு 6 மாதங்களில் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஆதேவ் அர்ஜுனா விளக்கமளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் சர்வதேச ஒலிம்பிக் தரத்திலான விளையாட்டு நகரம் அமைக்கும் திட்டம் குறித்து அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும், 46 வகையான விளையாட்டுகளை உள்ளடக்கி உலகத் தரத்தில் இதனை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு நகரத்தின் கட்டுமானப் பணிகள் ஆறு மாத காலத்திற்குள் தொடங்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.