கரீபியன் பிரீமியர் லீக்: அன்டிகுவா - நெவிஸ் பேட்ரியாட்ஸ் ஆட்டம் மழையால் ரத்து
கரீபியன் பிரீமியர் லீக் மழை கலக்கம்: செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் - அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் 21வது லீக் ஆட்டம் திடீர் மழையால் ரத்து, டாஸ் முடிந்ததும் நீண்ட நேரம் மழை தொடர்ந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிப்பு. Caribbean Premier League rain washout: St Kitts & Nevis Patriots vs Antigua & Barbuda Falcons 21st league match abandoned after persistent rain post toss, no play possible despite Antigua opting to bowl first.

கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் 21-வது லீக் போட்டி, செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் அன்டிகுவா அண்ட் பார்புடா பால்கன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுவதாக இருந்தது. இந்தப் போட்டியில் அன்டிகுவா அணி முதலில் பந்துவீச முடிவு செய்திருந்தது.
இருப்பினும், டாஸ் போடப்பட்ட பிறகு பெய்த கனமழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட நேரமாக மழை நீடித்ததால், ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.