PulseNews
விளையாட்டு

81 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!

திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற 18-வது லீக் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் அணி தனது அதிரடி பேட்டிங்கால் போட்டியை முழுமையாகத் தன்வசப்படுத்தியது. டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வி.கே. வினீத் (45 ரன்கள் - 20 பந்துகள்) மற்றும் சிவம சிங்க் (38 ரன்கள் - 15 பந்துகள்) அதிரடி தொடக்கம் அளித்தனர். நடுவரிசையில் களமிறங்கிய பாபா இந்திரஜித் சேலம் பந்துவீச்சாளர்களை நாலாபுறமும் சிதறடித்து வெறும் 25 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 3 ஃபோர்களுடன் 73 ரன்கள் விளாசினார். இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 15 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. சேலம் அணி சார்பில் ராஜேந்திரன் விவேக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 240 ரன்கள் என்ற இமாலய இலக்கைத் துரத்திய சேலம் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. எஸ். அபிஷேக் (38 ரன்கள்) ஓரளவு போராடிய போதிலும், திண்டுக்கல் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சேலம் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. திண்டுக்கல் அணியின் விஜு அருள் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சேலத்தின் ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தினார். 15 ஓவர்கள் முடிவில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே எடுத்தது . வெற்றி பெற்ற அணி: திண்டுக்கல் டிராகன்ஸ் (81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி)

Asianet News Tamil16 மணி நேரம் முன் · புதுப்பிக்கப்பட்டது
81 ரன்கள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அபார வெற்றி ! சேலம் ஸ்பார்ட்டன்ஸ் போராட்டம் தோல்வியில் முடிவு!
PulseNews சுருக்கம்

திண்டுக்கல் நத்தம் மைதானத்தில் நடைபெற்ற 18-வது லீக் போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மழையினால் 15 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், திண்டுக்கல் அணி தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தியது.

டாஸ் வென்ற சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. திண்டுக்கல் அணியின் தொடக்க வீரர்களான வி.கே. வினீத் 20 பந்துகளில் 45 ரன்களையும், சிவம சிங்க் 15 பந்துகளில் 38 ரன்களையும் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

மூலம்: Asianet News TamilAsianet News Tamil-இல் முழு செய்தியைப் படிக்க →
#sports