Team India: மீண்டும் ரோஹித் ஓய்வு குறித்த பேச்சு.. பிசிசிஐ போட்ட உத்தரவு.. குஷியான ரசிகர்கள்!
Rohit Sharma Retirement Rumors: ரோஹித்தின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவிற்கு இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்பட்டது. இருப்பினும், தற்போது அவரை அணியிலிருந்து உடனடியாக நீக்குவதற்குப் பதிலாக, அவருக்கு மேலும் வாய்ப்புகள் வழங்க முடிவு செய்யப்படுவதாக நம்பப்படுகிறது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ரோஹித் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் எதிர்காலம் குறித்து பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை அணியிலிருந்து உடனடியாக நீக்குவதற்குப் பதிலாக, தொடர்ந்து வாய்ப்புகளை வழங்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதன் மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் தனது திறமையை மீண்டும் நிரூபிக்க ரோஹித் சர்மாவுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த முடிவு அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.