MS Dhoni: சிஎஸ்கே பங்குகளை வாங்க ஆர்வம் காட்டும் எம்.எஸ்.தோனி.. நிராகரித்ததா சிஎஸ்கே நிர்வாகம்?
CSK - MS Dhoni: மகேந்திர சிங் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்கு வாங்க விரும்புகிறார். இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திடம் 25 சதவீத பங்குகளைக் கோரினார். ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க ஒப்புக்கொண்டது. மகேந்திர சிங் தோனி தனது கோரிக்கையை 20 சதவீதமாக உயர்த்தினார். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் 4 சதவீதத்தில் உறுதியாக இருந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பங்குகளை வாங்குவதற்கு மகேந்திர சிங் தோனி ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக நிர்வாகத்திடம் முதலில் 25 சதவீத பங்குகளை அவர் கோரிய நிலையில், நிர்வாகம் அதற்கு 3 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்தது.
இதனைத் தொடர்ந்து தனது கோரிக்கையை 20 சதவீதமாக தோனி மாற்றியமைத்தார். இருப்பினும், நிர்வாகம் தனது முடிவில் உறுதியாக இருந்து 4 சதவீத பங்குகளை மட்டுமே வழங்க முன்வந்துள்ளது.