ஜூலை மாத ஐசிசி விருதுகளை அள்ளிய வெஸ்ட் இண்டீஸ்: ஜஸ்டின் கிரீவ்ஸ், ஹேலி மேத்யூஸ் சாதனை
ஐசிசி ஜூலை 2026 விருதுகள்: வெஸ்ட் இண்டீஸ் ஜஸ்டின் க்ரீவ்ஸ், கேப்டன் ஹேலி மேத்யூஸ் இருவரும் சிறந்த வீரர் விருதுகளை அள்ளி வரலாற்றுச் சாதனை படைத்தனர். ICC July 2026 awards: West Indies stars Justin Greaves and captain Hayley Matthews clinch Player of the Month honours, marking country’s first double win in same month.

ஜூலை 2026 மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான ஐசிசி விருதுகளை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜஸ்டின் கிரீவ்ஸ் மற்றும் கேப்டன் ஹேலி மேத்யூஸ் ஆகியோர் வென்றுள்ளனர். ஒரே மாதத்தில் இரு பிரிவுகளிலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறையாகும்.
இந்த வரலாற்றுச் சாதனையின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு பெருமை கிடைத்துள்ளது. ஐசிசி விருதுப் பட்டியலில் ஒரே மாதத்தில் இருவேறு வீரர்களை முதலிடத்திற்கு கொண்டு வந்து வெஸ்ட் இண்டீஸ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.