17 பேருக்கு ‘அர்ஜுனா விருது’ அறிவிப்பு... ஒருவருக்கு கூட 'கேல் ரத்னா' இல்லையா?
2025 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை பெறும் வீரர், வீராங்கனைகளின் பட்டியலை மத்திய அரசு இன்று செவ்வாய்கிழமை வெளியிட்டு இருக்கிறது. ஓய்வுபெற்ற முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் அதன்படி, அர்ஜுனா விருது பெற்ற முக்கியப் பெயர்களில், உயரம் தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், ஓட்டப்பந்தய வீரர்கள் முகமது அஜ்மல் வி மற்றும் பிரியங்கா கோஸ்வாமி, பேட்மிண்டன் வீராங்கனைகள் த்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த், சதுரங்க வீரர்கள் விதித் குஜராத்தி மற்றும் திவ்யா தேஷ்முக், ஹாக்கி வீரர்கள் லால்ரெம்சியாமி மற்றும் ராஜ்குமார் பால், மற்றும் துப்பாக்கிச் சுடுதல் வீரர் அகில் ஷியோரன் ஆகியோர் அடங்குவர். மாற்றுத்திறனாளிகளுக்கான துப்பாக்கிச் சுடுதல் வீரர் ருத்ரான்ஷ் கண்டேல்வால் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள வீராங்கனை ஏக்தா பியான் ஆகியோரும் அங்கீகரிக்கப்பட்டனர். படகோட்டி அரவிந்த் சிங், குத்துச்சண்டை வீரர் நரேந்தர், கபடி வீராங்கனைகள் சுர்ஜீத் மற்றும் பூஜா, காது கேளாத துப்பாக்கிச் சுடும் வீரர் தனுஷ் ஸ்ரீகாந்த் ஆகியோர் 17 அர்ஜுனா விருது பெற்றவர்களின் பட்டியலை நிறைவு செய்தனர். கால்பந்து விளையாட்டில் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரர், ஐ.அருமைநாயகத்துக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1962-ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் அவர் இடம்பெற்றிருந்தார்; மேலும், தனது விளையாட்டு வாழ்க்கையில் மூன்று முறை டுராண்ட் கோப்பையையும் வென்றுள்ளார். ஒருவருக்கு கூட 'கேல் ரத்னா' இல்லையா? இந்நிலையில், இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதுக்கு மத்திய அரசு யாருடைய பெயரையும் பரிந்துரைக்கவில்லை என்பது தான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. உலகப் புகழ் பெற்ற ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்தின் பெயரால் வழங்கப்படும் இவ்விருது, விளையாட்டுத் துறையில் சிறப்பான சாதனைகளைப் புரிந்ததற்காக அளிக்கப்பட்டதுடன், நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதாகவும் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு நான்கு விளையாட்டு வீரர்கள் கேல் ரத்னா விருது பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த விருது ஒரு வீரருக்கு கூட வழங்கப்படவில்லை. இதனை விளையாட்டு ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகிறார்கள். செஸ் உலக சாம்பியன் குகேஷ் தொம்மராஜு, இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங், மாற்றுத்திறனாளி வீரர் பிரவீன் குமார் மற்றும் ஒலிம்பிக் பதக்க வீரர் மனு பாக்கர் ஆகியோர் 2024-ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றனர். டிசம்பர் 2024-ல் செஸ் விளையாட்டில் மிக இளம் வயது உலக சாம்பியன் ஆனதற்காக குகேஷ் அங்கீகரிக்கப்பட்டார். அதே சமயம், சுதந்திரத்திற்குப் பிறகு ஒரே ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை மனு பாக்கர் பெற்றார். வழக்கமான பிரிவில் துரோணாச்சார்யா விருதுக்கு மூன்று பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள் தடகளப் பயிற்சியாளர் பர்வீர் சிங், குத்துச்சண்டைப் பயிற்சியாளர் சோட்டே லால் யாதவ் மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் நேஹா நந்தகுமார் சவான். வாழ்நாள் பிரிவில் குத்துச்சண்டைப் பயிற்சியாளர் தர்மேந்திர சிங் யாதவ் மற்றும் மல்யுத்தப் பயிற்சியாளர் வீரேந்தர் குமார் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்டனர் விளையாட்டை ஊக்குவிப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஆற்றிய பங்களிப்பிற்காக பெருநிறுவனங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு வழங்கப்படும் 'ராஷ்ட்ரிய கேல் ப்ரோத்சஹான் புரஸ்கார்' விருது, புனேயில் உள்ள 'ஆர்மி பாராலிம்பிக் நோட்' (Army Paralympic Node) அமைப்பிற்கு வழங்கப்பட்டது. அர்ஜுனா மற்றும் துரோணாச்சாரியார் விருதுகள் பல்வேறு வகையான விளையாட்டுச் சாதனைகளை அங்கீகரித்த அதே வேளையில், 'கேல் ரத்னா' விருதுக்கு யாரும் தேர்ந்தெடுக்கப்படாததால், 2025-ஆம் ஆண்டுக்கான சுழற்சியில் நாட்டின் உயரிய விளையாட்டு விருதைப் பெற்றவர்களின் பட்டியலில் புதிய பெயர் எதுவும் இடம்பெறவில்லை. அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல்: தேஜஸ்வின் ஷங்கர் - தடகளம் முகமது அஜ்மல் - தடகளம் பிரியங்கா கோஸ்வாமி - தடகளம் ட்ரீசா ஜாலி - பாட்மிட்டன் காயத்ரி கோபிசந்த் - பேட்மிண்டன் நரேந்தர் - குத்துச்சண்டை விதித் குஜராத்தி - செஸ் திவ்யா தேஷ்முக் - செஸ் தனுஷ் ஸ்ரீகாந்த் - காதுகேளாதோர் துப்பாக்கி சுடுதல் லால்ரெம்சியாமி - ஹாக்கி ராஜ்குமார் பால் - ஹாக்கி சுர்ஜித் - கபடி பூஜா - கபடி ருத்ரன்ஷ் கண்டேல்வால் - மாற்றுத்திறனாளி துப்பாக்கி சுடுதல் ஏக்தா பயான் - பாரா தடகளம் அரவிந்த் சிங் - ரோயிங் அகில் ஷியோரன் - துப்பாக்கி சுடுதல் துரோணாச்சார்யார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல்: பர்வீர் சிங் - தடகளம் சோட்டே லால் யாதவ் - குத்துச்சண்டை நேஹா நந்த்குமார் சவான் - துப்பாக்கி சுடுதல் தர்மேந்திர சிங் யாதவ் -குத்துச்சண்டை (வாழ்நாள் சாதனை) விரேந்தர் குமார் - மல்யுத்தம் (வாழ்நாள் சாதனை)

2025-ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளைப் பெறும் வீரர்களின் பட்டியலை மத்திய அரசு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் குமார் மிஸ்ரா தலைமையிலான தேர்வுக் குழுவின் பரிந்துரைப்படி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, மொத்தம் 17 பேருக்கு அர்ஜுனா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் உயரந்தாண்டுதல் வீரர் தேஜஸ்வின் சங்கர், ஓட்டப்பந்தய வீரர்கள் முகமது அஜ்மல் வி மற்றும் பிரியங்கா கோஸ்வாமி உள்ளிட்டோர் அடங்குவர். எனினும், இந்த ஆண்டு கேல் ரத்னா விருது யாருக்கும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.